பாகிஸ்தானுக்கு ரகசிய தகவல் கொடுத்த டி.ஆர்.டி.ஓ. விஞ்ஞானி கைது!

பாகிஸ்தானுக்கு ரகசிய தகவல் கொடுத்த டி.ஆர்.டி.ஓ. விஞ்ஞானி புனேவில் கைது.

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் (DRDO) பணிபுரியும் விஞ்ஞானி பிரதீப் குருல்கர், நாட்டின் பாதுகாப்பு தொடர்பான ரகசியங்களை பாகிஸ்தான் உளவுத்துறைக்கு அளித்ததாக மகாராஷ்டிரா பயங்கரவாத எதிர்ப்பு படையால் (ATS) புனேவில் கைது செய்யப்பட்டார்.

வாட்ஸ்அப் மற்றும் வீடியோ அழைப்புகள் மூலம் பாகிஸ்தான் உளவுத்துறைக்கு தொடர்ந்து ரகசியங்களை கசிய விட்டு வந்ததாக மகாராஷ்டிரா பயங்கரவாத எதிர்ப்பு படை விசாரணையில் அம்பலமானது என தகவல் வெளியாகியுள்ளது. இதுபோன்ற செயல் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என்பதை அறிந்திருந்தும், விஞ்ஞானி தனது பதவியை தவறாக பயன்படுத்தி, அந்த விவரங்களை எதிரி நாட்டுக்கு அளித்துள்ளார் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

உத்தியோகபூர்வ ரகசிய சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் ஒரு குற்றம் மும்பையில் உள்ள ATS-இன் கலாசௌகி பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் மேலும் இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.