எந்த மெட்டில் பாடினாலும் பாடப்படுவது தமிழ் தாய் வாழ்த்து‌ என அண்ணாமலைக்கு தெரியாதா? – கே.பாலகிருஷ்ணன்

தமிழ் தாய் வாழ்த்தை அவமதித்த பாஜக, தமிழ் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என அண்ணாமலை ட்வீட். 

நேற்று கர்நாடகா, சிவமோகா நகரில் நடைபெற்ற நிகழ்வில், பாஜக முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா, தமிழ்த்தாய் வாழ்த்தை பாதியில் நிறுத்தி கர்நாடக மாநில கீதத்தை பாட வைத்துள்ளார்.  கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில் தமிழர்களின் ஆதரவை பெற நடைபெற்ற கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

பாஜக, தமிழ் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்

இதற்க்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், இதுகுறித்து கே.பாலகிருஷ்ணன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘கர்நாடகத்தில் பாஜக நிகழ்ச்சியில் தமிழ்த் தாய் வாழ்த்து பாடல் அவமதிக்கப்பட்டுள்ளது கடும் கண்டனத்திற்குரியதாகும். தமிழ் தாய் வாழ்த்தினை இசைக்கவிட்டு பாதியில் நிறுத்தி அவமதித்துள்ளனர். அப்போது மேடையிலேயே நின்றுகொண்டிருந்த பாஜக தலைவர் அண்ணாமலை, எந்த எதிர்வினையும் செய்யவில்லை.

சமூக ஊடகங்களில் இந்த காட்சியை பார்த்த பலரும் கண்டித்து வருகின்றனர். இப்போது அண்ணாமலை பாடலின் மெட்டு சரியில்லை என்று வித்தியாச விளக்கத்தை கொடுத்துள்ளார். எந்த மெட்டில் பாடினாலும் பாடப்படுவது தமிழ் தாய் வாழ்த்து‌ என அண்ணாமலைக்கு தெரியாதா? தமிழ் தாய் வாழ்த்தை அவமதித்த பாஜக, தமிழ் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.’ என பதிவிட்டுள்ளார்.