உடைத்து ஊற்றிய முட்டை குழம்பில் முட்டை பிரிந்து விடுகிறதா?.அப்போ இதை ஃபாலோ பண்ணுங்க..!

குறைந்த செலவில் ஒரு அசைவ குழம்பு வேண்டும் என்றால் அனைவரது தேர்வும்  முட்டையாக தான் இருக்க முடியும். ஒரு சிலருக்கு முட்டை குழம்பு செய்யும்போது முட்டை குழம்புடன் கலந்து பிரிந்து  விடும், அப்படி வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று இப்பதிவில் பார்ப்போம்..

தேவையான பொருட்கள்
பெரிய வெங்காயம்= இரண்டு
பூண்டு = பத்து பள்ளு
முந்திரி= 3
சீரகம்= அரை ஸ்பூன்
சோம்பு= அரை ஸ்பூன்
மிளகு= அரை ஸ்பூன்
பிரியாணி இலை= ஒன்று
பட்டை= ஒன்று
கிராம்பு= இரண்டு
சின்ன வெங்காயம்= ஒரு கைப்பிடி அளவு
இஞ்சி பூண்டு பேஸ்ட்= ஒரு ஸ்பூன்
மட்டன் மசாலா= ஒரு ஸ்பூன்
கறி மசாலா =ஒரு ஸ்பூன்
மிளகாய்த்தூள்= ஒரு ஸ்பூன்
மல்லித்தூள்= இரண்டு ஸ்பூன்
மஞ்சள் தூள்= ஒரு ஸ்பூன்
முட்டை= ஆறு
எண்ணெய் = நான்கு ஸ்பூன்

செய்முறை

பெரிய வெங்காயம், பூண்டு ,சீரகம் ,முந்திரி, மிளகு, சோம்பு ஆகியவற்றை அரைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய்  ஊற்றி அதிலே சோம்பு பட்டை கிராம்பு, பிரியாணி இலை, சின்ன வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து வதக்கவும். பிறகு தக்காளியை பேஸ்ட் ஆக அரைத்து ஊற்றி கிளறவும். அதிலே இஞ்சி பூண்டு பேஸ்டையும் சேர்த்துக் கொள்ளவும்.

தக்காளி பச்சை வாசனை போகும் வரை வதக்கி, மிளகாய்த்தூள், மல்லித்தூள் கறி மசாலா தூள், மட்டன் பொடி ஆகியவற்றை சேர்த்து  வதக்கி விடவும் இப்போது நாம் அரைத்து வைத்துள்ள விழுதையும் சேர்த்து தண்ணீரையும் சிறிதளவு சேர்த்து கொதிக்க விடவும், அது கிரேவி பதத்திற்கு வந்த பிறகு ஒரு கப்பில் ஒவ்வொரு முட்டையாக உடைத்து ஊற்ற  வேண்டும் இவ்வாறு ஊற்றினால்   வெள்ளைக்கரு பிரியாமலும் குழம்புடன்  கலக்காமலும் முட்டை தனித்தனியாக பந்து போல இருக்கும். இப்போது காரசாரமான முட்டை குழம்பு ரெடி. இவ்வாறு மசாலா அரைத்து செய்தால் குழம்பு சுவையாக இருக்கும்.

முட்டையின் பயன்கள் 

முட்டையில் அதிகப்படியான புரதச்சத்தும், இரும்பு சத்தும் ,அமினோ அமிலங்களும் நிறைந்துள்ளது. வளர் இளம் குழந்தைகளுக்கும் வளரிளம்  பெண்களுக்கும் தினமும் ஒரு முட்டை ஒரு முட்டையாவது கொடுத்து வந்தால் அவர்களுக்கு போதுமான ஊட்டச்சத்து கிடைக்கும்.

அவித்து முட்டை குழம்பு செய்வதை விட உடைத்து ஊற்றி முட்டை குழம்பு செய்து பாருங்கள் அதன் ருசி நாவை சுண்டி இழுக்கும். ஒரு அவசரமான நேரங்களில் இந்த மாதிரி முட்டை குழம்பு செய்து அசத்துங்கள்.