கலரே கலக்கலா இருக்கே! ஏர் இந்தியா வெளியிட்ட புதிய டிசைன் மற்றும் லோகோ!

இந்தியாவில் உள்ள டாடா நிறுவனத்துக்கு சொந்தமான விமான சேவை நிறுவனமான ஏர் இந்தியா, தனது புதிய லோகோ, பெயர் மற்றும் விமானங்களின் புதிய வெளிப்புற தோற்றத்த்தில் மாற்றம் செய்து அறிமுகப்படுத்தியுள்ளது. “தி விஸ்டா” என அழைக்கப்படும் இந்த புதிய லோகோ விமானத்தின் வால் பகுதியில் தங்க நிற ஜன்னல் போன்றத் தோற்றத்தைக் கொண்டுள்ளது.

மேலும், இந்த டிசைனில் அடர் சிவப்பு மற்றும் அடர் ஊதா நிறம் உள்ளது. ஏர் இந்தியா பெயர் ஆனது சான்ஸ் எழுத்துருவில் புத்தம் புதிய ஸ்டைலில் ‘ஏர் இந்தியா’ என்று எழுதப்பட்டிருகிறது. இந்த புதிய லோகோவையும் வடிவமைப்பையும் டிசம்பர் 2023 முதல் அதன் விமானங்களில் வெளியிடப்படும் என ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.

Air India Logo
Air India Logo [Image source : Money Control]]

ஏர் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி கேம்ப்பெல் வில்சன் கூறுகையில், எங்கள் புதிய பிராண்ட் ஏர் இந்தியாவை உலகத் தரம் வாய்ந்த நிறுவனமாக நிலைநிறுத்துவதற்கான எங்கள் விருப்பத்தை பிரதிபலிக்கிறது. அதன் சேவைகளை உலகம் முழுவதும் உள்ள பயணிகளுக்கு விரிவுபடுத்துகிறது.

இந்த பரிணாமம் நம்பிக்கையான மற்றும் துடிப்பான புதிய ஏர் இந்தியாவை பிரதிபலிக்கிறது. நமது செழுமையான பாரம்பரியம் மற்றும் உலகளாவிய சேவைத் தரங்களை அமைக்கும் இந்திய விருந்தோம்பலின் தனிச்சிறப்பு ஆகியவற்றுடன் ஆழமாக இணைக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

மேலும், ஏர் இந்தியா நிறுவனம் 70 பில்லியன் டாலர் ஒப்பந்தத்தில் ஏர்பஸ் மற்றும் போயிங் நிறுவனத்திடம் இருந்து 470 புதிய விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. நவம்பர் மாதத்திற்குள் இந்த விமானத்தின் விநியோகம் தொடங்கும் எனக் கூறப்படுகிறது.

இந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற பாரிஸ் விமான கண்காட்சியையொட்டி கொள்முதல் ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில் 34 A350-1000 விமானம், 6 A350-900 விமானம், 20 போயிங் 787 ட்ரீம்லைனர்கள் மற்றும் 10 போயிங் 777X வைட்பாடி விமானங்கள், 140 ஏர்பஸ் A320 நியோ, 70 ஏர்பஸ் A321 நியோ மற்றும் 190 போயிங் 737MAX நாரோபாடி விமானங்கள் ஆகியவை அடங்கும்.