#Breaking : சட்டப்பேரவையில் ஆளுநர் ரவியின் உரை.! திமுக கூட்டணி கட்சி எம்எல்ஏக்கள் வெளிநடப்பு.!

திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் எம்எல்ஏக்கள் சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து பலர் வெளிநடப்பு செய்துள்ளனர்.

தமிழக சட்டப்பேரவையில் இந்தாண்டின் (2023) முதல் கூட்டத்தொடர் தொடங்கியது. அதில் ‘வரப்புயர நீர் உயரும், நீர் உயர நெல் உயரும்.’ என தமிழில் தனது உரையை தொடங்கினார் ஆளுநர் ரவி. இந்திய அளவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசின் கீழ் தமிழகம் நல்ல முறையில் செயல்பட்டு வருகிறது. அனைத்து அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கும் அரிசி, சர்க்கரை, கரும்பு கொடுப்பதன் மூலம் தமிழக அரசு 2,429 கோடி ரூபாய்க்கு பொங்கல் பரிசுக்காக ஒதுக்கியுள்ளது என குறிப்பிட்டார்.

ஆளுநரை ரவி சட்டப்பேரவையில் தனது உரையை தொடங்கும் போதே  திமுக கூட்டணி கட்சிகள் தங்கள் எதிர்ப்பை வெளிக்காட்ட தொடங்கி விட்டனர். தொடர்ந்து திமுக கூட்டணி கட்சியினர் எங்கள் நாடு தமிழ்நாடு என முழக்கமிட ஆரம்பித்து விட்டனர்.

பின்னர் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் எம்எல்ஏக்கள் சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து பலர் வெளிநடப்பு செய்துள்ளனர். இதனால் இந்தாண்டு முதல் சட்டப்பேரவையே மிகவும் பரபரப்பாக காணப்படுகிறது.

 

Leave a Comment