உயிர்கொல்லி நீட் தேர்வு.! திமுக அணிகள் உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு.! 

தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிரான நிலைப்பாட்டை தான் பிரதான கட்சிகள் முன்னெடுத்து வருகின்றன. முந்தைய அதிமுக ஆட்சி முதல் தற்போதைய திமுக ஆட்சி வரையில் தமிழகதிற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தான் நடவடிக்கைள் மேற்கொண்டன, மேற்கொண்டு வருகின்றன.

சமீபத்தில் கூட நீட் தேர்வில் தோல்வி அடைந்த காரணத்தில் சென்னை, குரோம்பேட்டையில் மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். மகன் இறந்த துக்கம் தாளாமல் தந்தையும் தற்கொலை செய்து கொண்டார்.

அண்மையில் ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் உடனான கலந்துரையாடல் விழாவில் மாணவரின் பெற்றோர் எழுப்பிய நீட் விலக்கு மசோதா பற்றிய கேள்விக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி நீட் விலக்கு மசோதாவில் கையெழுத்திட மாட்டேன் என கூறியிருந்தார். இதற்க்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டங்கள் எழுந்தன.

இந்நிலையில் தற்போது திமுக இளைஞரணி, திமுக மாணவரணி, திமுக மருத்துவர் அணி என திமுக அணியினர் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில், தமிழகத்தில் நீட் விலக்குக்கு அனுமதி அளிக்காத மத்திய அரசை கண்டித்தும், நீட் விலக்கு மசோதாவுக்கு எதிராக கருத்து தெரிவித்து வரும் ஆளுநர் ஆர்.என்.ரவியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், வரும் 20ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் திமுக அணியினர் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என அணி நிர்வாகிகள் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் , எழிலரசன், திமுக எம்பி கனிமொழி ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.