கோவில்ல நேர்த்தி கடன் செலுத்த மறந்துட்டீங்களா? அப்போ இந்த பதிவு உங்களுக்குத்தான்.!

நேர்த்திக்கடன் என்பது ஒரு பக்தன் இறைவனிடம் தன்னுடைய விருப்பங்களை நிறைவேற்றி விட்டால் தங்களுக்கு இதை செய்கிறேன் என பிரார்த்தனை செய்வதாகும், இதை சில காரணங்களால் மறந்து விடுகிறோம் அல்லது நாம் இருக்கும் இடத்தை விட்டு வேறு ஒரு நாட்டிற்கோ அல்லது  இடத்திற்கோ சென்று விட்டோம் என்றால் அந்த நேர்த்திக்கடனை எவ்வாறு செலுத்துவது மற்றும் மறந்து விட்டால் என்ன செய்வது என்ற சந்தேகங்களுக்கு பதில் அளிக்கும் வகையில் இந்த பதிவு அமைந்திருக்கும்…

நேர்த்திகடன்   ஒவ்வொருவரின் மனப்பக்குவத்தை பொறுத்து மாறுபடும். நேத்திக்கடன் செய்தால் தான் கடவுள் நமக்கு கேட்டதை கொடுப்பாரா என்றெல்லாம் ஒன்றுமில்லை, ஆனால் பக்தர்களாகிய நாம் தான் இறைவனிடம் இருக்கும் அதீத நம்பிக்கையால் அருளைப் பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் அல்லது தன்னுடைய துன்பம் மாற வேண்டும் என்பதற்காகவும் நாமாகவே நேர்ந்து கொள்வது தான் நேத்திக்கடன். இதன் பெயரிலேயே பொருள் உள்ளது கடன் வாங்கினால் திரும்ப செலுத்த வேண்டும் ஆகையால் நாம் வேண்டியது நிறைவு பெற்றதும் திரும்ப செலுத்த வேண்டும்.

கடன் வாங்கி விட்டு திரும்ப செலுத்தவில்லை என்றால் அது வட்டி மேல் வட்டி வந்துவிடும் அது போல தான் நேர்த்திக்கடனும் பாவ கணக்கில் சேர்ந்து கொண்டே போகும் இதுவே நிதர்சையான உண்மை.

நேர்த்தி கடனை வேறு கோவிலில் செலுத்தலாமா ?

உதாரணமாக ஒருவர் பழனி முருகனிடம், குழந்தை பிறந்தால்  மொட்டை அடிக்கிறோம் என்று வேண்டி கொண்டு பிறகு வேலை கிடைத்து வேறு நாட்டிற்கு சென்றுவிட்டாள் ,அவர் அங்குள்ள முருகன் கோவிலில் முடியை காணிக்கையாக செலுத்தி விட்டு அதில் ஒரு பகுதியை மட்டும்  முருகனுக்கு காணிக்கையும் அந்த நபரின் குலதெய்வத்திற்கு காணிக்கையும் எடுத்து வீட்டிலே வைத்து விட வேண்டும் இதை எப்போது  முடிகிறதோ எத்தனை ஆண்டுகள் கழித்து வேண்டுமானாலும் அந்தக் கோவிலில் காணிக்கையும் முடியும் செலுத்தி விட வேண்டும். ஆனால் முடிந்தவரை அந்தந்த கோவில்களில் நேத்தி கடன் செலுத்துவது தான் சாலச் சிறந்தது.

நேர்த்திக்கடனை மறந்து விட்டால் என்ன செய்வது..?

உதாரணமாக ஒருவருக்கு குழந்தை பிறக்க வேண்டி அவருடைய தாய், தந்தை முதல் அக்கா ,அண்ணன் வரை அனைவரும் ஒவ்வொரு கோவிலில் அதாவது செல்லும் கோவிலுக்கு எல்லாம் குழந்தை பிறக்க வேண்டி நேர்த்தி கடன் வைத்திருப்பார்கள் ஆனால் அதை அந்த நபர்களிடம் கூறாமல் மறந்து இருப்பார்கள் அல்லது வயது முதிர்வு காரணமாக காலமாகி  இருப்பார்கள் இந்த சூழ்நிலையில் ,உங்கள் குலதெய்வத்திற்கு பௌர்ணமி அன்று படையல் இட்டு அன்னதானம் வழங்க வேண்டும் இவ்வாறு தொடர்ந்து ஆறு மாதங்கள் பௌர்ணமி அன்று செய்ய வேண்டும் .அந்த கடவுளிடம், நாங்கள் நேர்ந்து கொண்ட நேர்த்திக்கடன் மறந்து விட்டோம் உம்முடைய கருணையால் இந்த பூஜையை ஏற்றுக் கொண்டு எந்தெந்த தெய்வத்திற்கு வேண்டினோமோ அந்த தெய்வத்திற்கு நீர் சேர்த்து எங்களை காப்பாற்றும் என்று  மனம் உருகி வேண்டிக் கொள்ள வேண்டும்.

ஒரு சிலருக்கு குலதெய்வம் கோவிலுக்கு பிரயாணம் செய்வது இரண்டு நாட்கள் அல்லது மூன்று நாட்கள் கடந்து செல்ல வேண்டிய சூழ்நிலை இருக்கலாம் இந்த சூழ்நிலையில் மாதம் மாதம்  பயணம் செய்ய முடியவில்லை என்றால் வீட்டிலேயே குலதெய்வத்திற்கு படையல் இட்டு அன்னதானம் வழங்க வேண்டும். இது பிரயாணம் செய்ய முடியாதவர்கள் மட்டும் இவ்வாறு செய்து கொள்ளலாம்.

ஒருவேளை குலதெய்வம் தெரியவில்லை என்றால் அவரவரின் இஷ்ட தெய்வத்திற்கு செய்யலாம்.
ஆகவே கடன் எப்படி ஒரு சுமையோ அது போல் தான் நேர்த்தி  கடனும், அதனால் அந்த தெய்வ ஆலயத்தில் செய்வதுதான் சிறப்பு ஒருவேளை முடியவில்லை என்றால் மேலே கூறியவற்றை பின்பற்றி இறைவனை சரணாகதி அடைந்தால் அவர் நம்மை குழந்தையாக பாவித்து பூஜையை ஏற்று அருள் புரிவார்.