அதிரடி ஆட்டம்.. எப்படி போட்டாலும் அடி.. மும்பையை கதிகலங்க வைத்த டெல்லி இளம் வீரர்!

IPL2024: மும்பைக்கு எதிரான போட்டியில் டெல்லி அணியின் இளம் வீரர் ஜேக் ஃப்ரேசர் மெக்குர்க் குறைந்த பந்துகளில் அரை சதம் அடித்து அசத்தல்.

ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடரின் இன்று பிற்பகல் 3 மணிக்கு தொடங்கிய போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதி வருகிறது. டெல்லி அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் மும்பை அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஜேக் ஃப்ரேசர் மெக்குர்க் மற்றும் அபிஷேக் போரல் களமிறங்கி அதிரடியான தொடக்கத்தை கொடுத்தனர். இதில் குறிப்பாக 22 வயது இளம் வீரரான ஜேக் ஃப்ரேசர் மெக்குர்க் ஆரம்பத்தில் இருந்தே அதிரடியாக விளையாடினார். ஜஸ்பிரித் பும்ராவின் முதல் ஓவரிலேயே 18 ரன்களை அடித்து மும்பையை கதிகலங்க வைத்தார்.

பும்ரா மட்டுமின்றி மும்பை பந்துவீச்சாளர்கள் ஹர்திக் பாண்டியா உட்பட யாரு போட்டாலும், எப்படி போட்டாலும் நாலாபுறமும் பந்துகளை பறக்கவிட்டார். இதனால் மும்பை அணி சற்று மிரண்டு போனது. அதிரடியாக விளையாடிய ஜேக் ஃப்ரேசர் மெக்குர்க் அதிவேகமாக 15 பந்துகளிலேயே தனது அரசை சதத்தை அடித்தார்.

ஏற்கனவே ஐதராபாத்துக்கு எதிராக 15 பந்துகளில் அரைசதம் அடித்த அவர், இன்று மீண்டும் குறைந்த பந்துகளில் அதுவும் மும்பைக்கு எதிரான போட்டியில் அடித்து அசத்தியுள்ளார். இறுதியாக 27 பந்துகளில் 84 (11 பவுண்டரிஸ், 6 சிக்ஸர்ஸ்) ரன்கள் எடுத்திருந்த நிலையில், 8வது ஓவரில் சாவ்லா பந்துவீச்சில் நபியிடம் கேட்ச் கொடுத்து ஜேக் ஃப்ரேசர் மெக்குர்க் தனது விக்கெட்டை இழந்தார்.

Recent Posts

தமிழகத்தில் 4 மணி வரை இந்த 22 மாவட்டத்துக்கு மழை எச்சரிக்கை!

சென்னை : தமிழகத்தில் 4 மணி வரை 22 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தகவலை தெரிவித்துள்ளது. தமிழகத்தில், இந்த கோடை காலத்திலும்…

6 mins ago

அது பெருசா பாதிக்காது! ஹர்திக்கை பாராட்டும் காலம் சீக்கிரம் வரும் – சுரேஷ் ரெய்னா!

சென்னை : இந்திய அணியின் முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா, டி20 உலகக்கோப்பைக்கு தகுதி பெற்ற இந்திய அணியை பற்றி பேசியதுடன், ஹர்திக் பாண்டியாவிற்கு ஆதரவாகவும் பேசி இருக்கிறார்.…

16 mins ago

எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவிற்கு பிறகு எடப்பாடியார் தான்.! எஸ்.பி.வேலுமணி பரபரப்பு விளக்கம்.!

சென்னை: அதிமுகவிற்குள் பிளவு எதுவும் இல்லை என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பதில் அளித்துள்ளார். அதிமுகவிற்குள் பிளவு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உடன் கருத்து வேறுபாடு…

22 mins ago

உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்.!

சென்னை: வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதால் மீனவர்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நாளை மறுநாள் (22 ஆம்…

25 mins ago

நீங்க கண்டிப்பா பண்ணனும்! கவினுக்கு கால் செய்த ஆண்ட்ரியா?

சென்னை : நடிகர் கவனுக்கு கால் செய்து மாஸ்க் படத்தை நடிக்க ஆண்ட்ரியா கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் கவின் ஸ்டார் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக…

40 mins ago

கேஜிஎப் இயக்குனருடன் கைகோர்க்கும் ஜூனியர் என்.டி.ஆர்.! வெளியானது அதிகாரபூர்வ அறிவிப்பு..

சென்னை: ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் 31 படத்தின் ஷூட்டிங் ஆகஸ்ட் மாதம் துவங்கும் என அறிவிப்பு. தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் தனது 41வது பிறந்தநாளை இன்று…

55 mins ago