ஐ.நா.ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசியை இலவசமாக வழங்க முடிவு – விளாடிமிர் புதின்

ஐக்கிய நாடுகளின் ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசியை இலவசமாக வழங்க முடிவு செய்துள்ளது என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.

ஐ.நா. சபை உருவாக்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், உலக நாடுகளின் தலைவா்கள் காணொலி வாயிலாகப் கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் நேற்று உரையாற்றிய போது, ரஷ்யா விரைவில் இரண்டாவது கொரோனா தடுப்பூசியை பதிவு செய்யும் எனவும் கொரோனா தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான நாட்டின் திறனைப் பாராட்டினார்.

மேலும் அவர் கூறுகையில், ரஷ்ய ஜனாதிபதி விளாடமிர் புடின் ஐக்கிய நாடுகளின் ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசியை இலவசமாக வழங்க முடிவு செய்துள்ளதாக கூறினார். அதே நேரத்தில்,  ஐ.நா. தொழிலாளர்களுக்கு தேவையான உதவியை வழங்க ரஷ்யா தயாராக உள்ளது, குறிப்பாக எங்கள் தடுப்பூசியை அமைப்பின் ஊழியர்களுக்கும், தடுப்பூசிக்கு முன்வந்த அதன் துணை நிறுவனங்களுக்கும் இலவசமாக வழங்க நாங்கள் முடிவு செய்துள்ளோம் என்று தெரிவித்தார்.