அடடே! பூசணிக்காயில் இப்படி ஒரு கிரேவியா?..

குளிர்காலத்தில் கிடைக்கக்கூடிய இந்த மஞ்சள்  பூசணிக்காயை வைத்து நாம் பொரியல், குழம்பு ,பச்சடி என்ன செய்து ருசித்திருப்போம். அந்த வகையில் இன்று மஞ்சள் பூசணிக்காயை வைத்து கிரேவி செய்வது எப்படி என பார்ப்போம்.

தேவையான பொருள்கள்

  • மஞ்சள் பூசணி =அரை கிலோ
  • வறுத்த வேர்க்கடலை =100 கி
  • தேங்காய்= அரை மூடி
  • காய்ந்த மிளகாய் =5
  • பெரிய வெங்காயம் =1
  • மஞ்சள் தூள் =அரை ஸ்பூன்
  • மிளகாய் தூள் =அரை ஸ்பூன்
  • மல்லித்தூள்= அரை ஸ்பூன்
  • கருவேப்பிலை =தேவையான அளவு
  • உப்பு =தேவையான அளவு
  • நல்லண்ணெய் =5 ஸ்பூன்

செய்முறை

பூசணிக்காயை தோல் நீக்கி நறுக்கி வைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் மூன்று ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு, வெங்காயம் சேர்த்து தாளித்து அதிலே பூசணிக்காயை  சேர்த்து ஐந்து நிமிடம் வதக்கவும். பிறகு மஞ்சள் தூள், மிளகாய் தூள் ,மல்லி தூள்  தேவையான அளவு உப்பு மற்றும்  தண்ணீர் ஊற்றி காய் முக்கால் பதம் வரும்வரை வேக வைக்கவும்.

மற்றொரு பாத்திரத்தில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதிலே தேங்காய், வர மிளகாய், கருவேப்பிலை ஆகியவற்றை பொன்னிறமாக மிதமான தீயில் வறுத்தெடுக்கவும். பிறகு ஒரு மிக்ஸியில் வறுத்த வேர்க்கடலை மற்றும் தேங்காயை சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் அரைத்தெடுக்கவும். ஒரு பாத்திரத்தில் இந்த அரைத்த விழுதை சேர்த்து கால் டம்ளர்தண்ணீர் ஊற்றி கலந்து கொதிக்க விடவும் அது பார்ப்பதற்கு கிரேவி படத்திற்கு இருக்க வேண்டும். பிறகு நாம்  செய்து வைத்துள்ள பூசணிக்காயை  அதிலே சேர்த்து மூன்று நிமிடம் கிளறி இறக்கவும். இப்போது  சுவையான பூசணிக்காய் வேர்க்கடலை கிரேவி ரெடி.

பூசணிக்காயின் பயன்கள்

பூசணிக்காயில் வாழைப்பழத்தை விட இரண்டு மடங்கு பொட்டாசியம் அதிகம் உள்ளது. பி காம்ப்ளக்ஸ் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.

இரைப்பை மற்றும் குடல் இயக்கத்தை மேம்படுத்துகிறது. கழிவுகளையும் நச்சுகளையும் வெளியேற்றுகிற,து கொழுப்பு கட்டி உள்ளவர்கள் பூசணிக்காயை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

பெப்டின்  என்ற வேதிப்பொருள் உள்ளதால் கொழுப்பை குறைத்து உயர் ரத்த அழுத்தத்தையும் குறைக்கிறது.

தவிர்க்க வேண்டியவர்கள்

கால் வலி மற்றும் குடைச்சல் உள்ளவர்கள்

இதில் நாம் வேர்க்கடலையும் சேர்த்து செய்துள்ளதால் பாதாமுக்கு நிகரான கால்சியம் சத்தும் உள்ளது.ஆகவே வாரத்தில் 3 நாட்களாவது பூசணிக்காயை சேர்த்து அதன் சத்துக்களை பெறுவோம்