CUET UG தேர்வு முடிவுகள் வெளியீடு..! தேர்வு முடிவுகளை எப்படி பார்க்கலாம்..?

CUET UG தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. 

மே 21 முதல் ஜூன் 23, 2023 வரை இந்தியா முழுவதும் 387 நகரங்களிலும், இந்தியாவுக்கு வெளியே 24 நகரங்களிலும் ஒன்பது கட்டங்களாக நடத்தப்பட்ட CUET UG தேர்வில் சுமார் 14.90 லட்சம் மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த நிலையில், பல்கலைக்கழகங்களுக்கான பொது நுழைவுத் தேர்வு முடிவுகள் முடிவுகளை யுஜிசி வெளியிட்டுள்ளது

தற்போது இந்த தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், இந்த தேர்வு முடிவுகளை தேர்வர்கள், NTA CUET UG இன் அதிகாரப்பூர்வ தளமான cuet.samarth.ac.in மூலம் தெரிந்து கொள்ளலாம். விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.