டொனால்ட் டிரம்ப் மீது மீண்டும் கிரிமினல் குற்றசாட்டு.! 2024 தேர்தலில் களமிறங்குவதில் கடும் சிக்கல்..?

முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது ஜார்ஜியா விசாரணை குழு 98 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது. அதில் கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமெரிக்க அதிபர் தேர்தல் விதிகளை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

2020 அமெரிக்க நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஜனநாயக கட்சி சார்பாக போட்டியிட்டு வென்ற தற்போதைய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெற்றியை தடுக்க முயற்சி செய்ததாகவும் டொனால்டு டிரம்ப் மீது ஜார்ஜியா விசாரணை குழு குற்றம் சாட்டியுள்ளது.

அந்த குற்ற பத்திரிக்கையில், டொனால்ட் டிரம்ப் மற்றும் குற்றம் சாட்டப்பட்ட மற்ற பிரதிவாதிகள் டிரம்ப் தோல்வியடைந்ததை ஏற்க மறுத்துவிட்டனர். மேலும் அவர்கள் வேண்டுமென்றே டிரம்பிற்கு ஆதரவாக தேர்தல் முடிவை சட்டவிரோதமாக மாற்றுவதற்கான வேளைகளில் ஈடுப்பட்டனர்.

இந்த 98 பக்க குற்றப்பத்திரிகையில் 19 பிரதிவாதிகள் மற்றும் 41 குற்ற வழக்குகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அனைத்து பிரதிவாதிகளும் மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். இந்த குற்ற பத்திரிகையில், ட்ரம்ப் தவிர, அவர் பதிவியில் வகித்த போது வெள்ளை மாளிகை தலைமை அதிகாரியாக பொறுப்பில் இருந்த மார்க் மெடோஸ் மற்றும் வழக்கறிஞர்கள் ரூடி கியுலியானி மற்றும் ஜான் ஈஸ்ட்மேன் ஆகியோரும் அடங்குவர்.

இந்த குற்றப்பத்திரிகையில் உள்ள குற்றசாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு அதிகபட்சமாக 20 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கப்பெரும் என்றும், அதுவரையில் தேர்தலில் போட்டியிட முடியாது என்றும் கூறப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக, வாஷிங்க்டன் நீதிமன்றம் டொனால்ட் டிரம்ப் நிரபராதி என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஜார்ஜியா விசாரணை குழு அறிக்கை தற்போது அமெரிக்க அரசியல் வட்டாரத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.