வீடியோ பார்க்கவில்லை… எங்கள் இதயம் உடைந்துவிடும்.! மணிப்பூர் கலவரம் குறித்து அமெரிக்க தூதர் கருத்து.!

மணிப்பூர் கலவரம் தொடர்பாக இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் கருத்து தெரிவிக்கையில், உலகில் மக்கள் எங்கு பாதிக்கப்பட்டாலும் எங்கள் இதயம் உடைந்துவிடும் என தெரிவித்தார். 

கடந்த மே மாதம் ஆரம்பித்த மணிப்பூர் கலவரமானது நேற்று முன்தினம் வெளியான விடியோவால் பலரது நெஞ்சத்தை பதறவைத்துள்ளது. அங்குள்ள மற்ற மக்களின் நிலை என்ன என திகைக்க வைத்துள்ளது. இரு பெண்களை ஒரு கொடூர கும்பல் ஆடைகளின்றி இழுத்து செல்லும் காட்சி அந்த விடீயோவில் பதிவாகி பலரது இதயத்தை கனக்க வைத்துவிட்டது.

இந்த கொடூர சம்பவம் பற்றி பல்வேறு கட்சி தலைவர்களும் தங்கள் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். இந்த கொடூர சம்பவம் தொடர்பாக விடியோவை ஆதாரமாக கொண்டு 4 பேரை மணிப்பூர் காவல்துறையினர் கைது செய்துஉள்ளனர். மேலும் பலரை தேடி வருகின்றனர்.

இந்நிலையில், இந்த கொடூர சம்பவம் பற்றி இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி கருத்து தெரிவிக்கையில், மணிப்பூரில் நடந்து வரும் வன்முறைகள் இந்தியாவின் உள் விவகாரம். நான் அந்த விடியோவை பார்க்கவில்லை. என்றும், நமது சுற்றுப்புறத்திலோ, மற்ற நாடுகளிலோ அல்லது நாமது நாட்டில் வாழும் மக்களுக்கோ யாருக்கு துன்பங்கள் ஏற்பட்டாலும், எங்கள் இதயங்கள் உடைந்து விடும் என்று மெரிக்க தூதர் எரிக் கார்செட்டி தனது கருத்தை கூறினார்.