கோவை கார் வெடிப்பு.! ஜமேசா முபீன் உடலை அடக்கம் செய்ய மறுத்த ஜமாத்துகள்.! பிறகு நடந்தது என்ன.?

மூக விரோத செயலுக்கு திட்டமிட்டது  போன்ற குற்றங்கள் ஜமேசா முபீன் மீது சுமத்தப்பட்டுள்ளதால் அவரது உடலை அடக்கம் செய்ய ஜமாத்கள் மறுப்பு தெரிவித்துவிட்டனர்.  

கடந்த ஞாயிற்று கிழமை அன்று அதிகாலை 4.10 மணிக்கு கோட்டைமேடு பகுதியில் இந்து கோவில் அருகே கார் ஒன்று சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானது. இதில் கார் முழுவதும் இருந்தது. காருக்குள் கோட்டைமேடு பகுதியை சேர்ந்த ஜமேசா முபீன் உடல்கருகி உயிரிழந்தார்.

சம்பவம் அறிந்து தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்தனர். காவல்துறையினர் , தடவியல் நிபுணர்கள் வந்து சோதனை செய்தனர். அதில், இரும்பு ஆணிகள், பால்ரஸ் உள்ளிட்ட பொருட்களை கைப்பற்றினர் .

பின்னர் ஜமேசா முபீன் பற்றி விசாரிக்கையில், இவர் மீது, கடந்த 2019ஆம் ஆண்டு என்.ஐ.ஏ பிரிவினர் சோதனை நடத்தியுள்ளனர். போதிய ஆதாரம் இல்லாத காரணத்தால் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கார் விபத்து சம்பவத்தை அடுத்து, அவரது வீட்டில் சோதனை நடைப்பெற்றது. அதில், வெடிகுண்டு தயாரிக்க மூலப்பொருட்கள் இருந்தது கண்டறியப்பட்டது. இதனால், ஏதேனும், நாசவேலைக்கு திட்டமிட்டிருக்கலாம் என கூறபடுகிறது.

இந்நிலையில், கோவை அரசு மருத்துவ கல்லூரியில் பிரேத பரிசோதனை முடிந்த பிறகு, ஜமேசா முபீன்  அவரது மனைவியிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர் உடலை பெற்றுக்கொண்டார்.

ஆனால், சமூக விரோத செயலுக்கு திட்டமிட்டது  போன்ற குற்றங்கள் ஜமேசா முபீன் மீது சுமத்தப்பட்டுள்ளதால் அவரது உடலை அடக்கம் செய்ய யாரும் முன்வரவில்லை. ஜாமத் அமைதியை விரும்புவதாலும் சமூக விரோத செயலுக்கு துணை போகாமல் இருப்பதற்காகவும் உடலை அடக்கம் செய்ய மறுப்பு தெரிவித்ததாக ஜமாத்துக்கள் எடுத்ததாக கூறப்பட்டது. இருந்தாலும், மனிதாபிமான அடிப்படையில் பூ மார்க்கெட் ஜமாத்தில் ஜமேசா முபீன் உடல் இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்யப்பட்டது.

Leave a Comment