தமிழ்நாடு

விஷச்சாராய விவகாரத்தில் அரசின் நடவடிக்கைகள்… முதல்வர் விளக்கம்.!

சென்னை: இன்று தமிழக சட்டப்பேரவையில், கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என அதிமுக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் கவனஈர்ப்பு தீர்மானங்கள் கொண்டுவந்தனர்.  இந்த கவனஈர்ப்பு தீர்மானங்கள் மீது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தற்போது உரையாற்றினார். அதில், கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தில் தமிழக அரசு முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து பேசினார்.

அப்போது அவர் பேசுகையில், கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தியவர்கள் உயிரிழந்த செய்திகேட்டு நான் மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். இந்த விவகாரத்தில் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். தடுக்கத் தவறிய அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

விஷச்சாராயம் புதுச்சேரியில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளதாக சிபிசிஐடி விசாரணையில் தெரிய வந்துள்ளது. சாராயத்தை விற்றவர்களிடம் இருந்து 200 லிட்டர் மெத்தனால் கைப்பற்றப் பட்டுள்ளது.

இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்கள் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவித்தால் குற்றவாளிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். சமூகத்தை பாழ்படுத்தும் இத்தகைய குற்றங்கள் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்படும்.

விஷச்சாராயத்தால் பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு கூடுதல் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்த சம்பவத்தில் தாய், தந்தை இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு 18 வயது வரை மாத பராமரிப்புத் தொகையாக 5000 ரூபாய் வழங்கப்படும். பெற்றோரை இழந்த குழந்தைகளின் உயர்கல்வி வரையிலான செலவை தமிழக அரசே ஏற்கும். பெற்றோரை இழந்தவர்களுக்கு 5 லட்சம் ரூபாய் வைப்புத் தொகை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பெற்றோரில் ஒருவரை இழந்த குழந்தைகளுக்கு 3 லட்ச ரூபாய் வைப்புநிதித் தொகை வழங்கப்படும்” எனவும் கவனஈர்ப்பு தீர்மானத்தில் தமிழக முதல்வர் மு,க.ஸ்டாலின் பேரவையில் உரையாற்றினார்.

Recent Posts

சிறகடிக்க ஆசை சீரியல் ..ஸ்ருதியின் அம்மாவால் தெரியவரும் உண்மைகள்..!

சிறகடிக்க ஆசை இன்று -விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரின் இன்றைக்கான [ஜூலை 5] கதைக்களத்தை இங்கே காணலாம். ரவியும் ஸ்ருதியும் கேக்கோட வீட்டுக்குள்ள…

45 seconds ago

முந்துங்கள் வருங்கால வங்கி ஊழியர்களே …! UCO வங்கியில் அப்ரண்டிஸ் வேலை ..!

UCO வங்கி : யுனைடெட் கமர்ஷியல் வங்கி லிமிடெட் (UCO) வங்கியில் அப்ரண்டிஸ் காலியிடங்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியா முழுவதும் 544…

26 mins ago

நல்லா நோட் பண்ணிக்கோங்க மக்களே! நாளை இந்த இடங்களில் மின்தடை!

மின்தடை  : நாளை ( ஜூலை 6 /7/2024) எந்தெந்த மாவட்டங்களில் எந்தெந்த இடங்களில் மின்தடை ஏற்படும் என்பதற்கான விவரத்தை பார்க்கலாம். தென் சென்னை - ஐய்யப்பன்தாங்கல் காட்டுப்பாக்கம்,…

40 mins ago

எடப்பாடி பழனிச்சாமி ஓர் நம்பிக்கை துரோகி.? அண்ணாமலை கடும் தாக்கு.!

விழுப்புரம்: நம்பிக்கை துரோகி என்ற வார்த்தை எடப்பாடி பழனிசாமிக்கு பொருத்தமாக இருக்கும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார்.. இன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி…

48 mins ago

ராத்திரி வேளையில் அடர்ந்த காட்டுக்குள் ராஷ்மிகா.. கட்டுக்கட்டாக பணம் எடுத்த காட்சி.!

குபேரா : இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர்கள் தனுஷ், நாகார்ஜுனா இணைந்து நடிக்கும் 'குபேரா' படத்தின் கதாநாயகி ராஷ்மிகா மந்தனாவின் முதல் தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளனர்.…

57 mins ago

மத்திய அரசு ஊழியர்களின் வைப்புநிதி (PF) வட்டி விகிதம் மாற்றமா? வெளியனாது அப்டேட்.!

டெல்லி : மத்திய அரசு ஊழியர்களின் பொது வருங்கால வைப்பு நிதி (ஜிபிஎஃப்) மற்றும் இதேபோன்ற பிற வருங்கால வைப்பு நிதி 7.1 சதவீத வட்டி விகிதமாக…

1 hour ago