வெடித்தது உள்நாட்டு போர்! எண்ணெய் கிடங்கு மீது ரஷ்ய ராணுவம் குண்டு வீச்சு! மாஸ்கோ நோக்கி முன்னேறும் வாக்னர் படை!

ரஷ்யாவில் உள்நாட்டு போர் அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளதாக தனியார் ராணுவ குழுவான வாக்னர் குழு தகவல்.

உக்ரைன் – ரஷ்யா இடையே ராணுவ தாக்குதல் நீடித்து வரும் நிலையில், உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா சார்பில் களமிறக்கப்பட்ட தனியார் ராணுவ குழுவான வாக்னர் குழுவின் படை அந்நாட்டுக்கு எதிராக திரும்பியுள்ளது  பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. ரஷ்ய ராணுவம், வாக்னர் கூலிப்படைகளைத் தாக்கியதாக குற்றசாட்டு எழுந்த நிலையில், ரஷ்யாவுக்குள்ளே அரசு ராணுவதுக்கு எதிராக வாக்னர் ஆயுதக்குழு தாக்குதலை நடத்தி வருகிறது.

ரஷ்ய ராணுவம் தனது படைகளைத் தாக்கியதாக குற்றம் சாட்டிய ரஷ்ய தனியார் ராணுவ நிறுவனமான வாக்னர் குழுவின் தலைவர் பிரிகோஜின்,  ஷ்யாவின் ராணுவத் தலைமையை அழிப்போம். எங்கள் ஆட்டத்தைத் தொடங்கிவிட்டோம். இனி எங்கள் வழியில் எதிர்கொள்ளும் எல்லாவற்றையும் துவம்சம் செய்வோம் என எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் ரஷ்யாவுக்குள் புகுந்து தாக்குதலை நடத்தி, ஒரு சில இடங்களை கைப்பற்றிய வருவதாகவும் தகவல் வெளியாகியிருந்தது. உக்ரைனுடன் போர் தொடுத்து வந்த நிலையில், தற்போது ரஷ்யாவில் உள்நாட்டு போர் வெடித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், ரஷ்யாவில் உள்நாட்டு போர் வெடித்துள்ள நிலையில், அந்நாட்டு ராணுவத்துக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ள தனியார் ராணுவ குழுவான வாக்னர் படை ரஷ்ய தலைநகர் மாஸ்கோவை நோக்கி முன்னேறி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பெரும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. ஏற்கனவே, ரோஸ்டோவ் நகரை கைப்பற்றிய வாக்னர் படை, தற்போது லிப்பெட்ஸ்க் பகுதிக்குள் நுழைந்துள்ளது. ரஷ்ய தலைநகர் மாஸ்கோவுக்கு, லிப்பெட்ஸ்க் பகுதியில் இருந்து 6 மணி நேரத்தில் செல்ல முடியும் என கூறப்படுகிறது.

ராணுவத்தின் தடுப்பு நடவடிக்கையை மீறி தலைநகரை நோக்கி வாக்னர் படை முன்னேறுவதால் பதற்றம் அதிகரித்துள்ளது. ரஷ்யாவில் உள்நாட்டு போர் அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளதாக வாக்னர் குழு தெரிவித்துள்ளது. தங்கள் பாதையில் குறுக்கிட வேண்டாம் என ரஷ்ய ராணுவத்திற்கு அறிவுறுத்தியுள்ளது. மேலும், உள்நாட்டு போர் வெடித்துள்ள ரஷ்யாவில், தலைநகர் மாஸ்கோ சிறையில் கலவரமும் வெடித்ததால் பரபரப்பான சூழல் நிலவுகிறது.

ரஷ்ய ராணுவத்திற்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ள வாக்னர் குழுவில் இருப்பவர்கள் பெரும்பாலானோர் சிறையில் இருந்தவர்கள் எனவும் அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது. வாக்னர் குழுவுக்கு ஆதரவாக சிறையில் கலவரம் நடந்ததாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல், ரஷ்யாவில் வாக்னர் குழு கைப்பற்றியுள்ள ரோஸ்டோவ் நகரில் பல இடங்களில் குண்டு வீச்சு சம்பவம் நடந்து வருகிறது. இதற்கிடையில், போர் நடந்து வரும் நிலையில், மாஸ்கோவில் இருந்து ரஷ்ய ஜனாதிபதிக்கு சொந்தமான விமானம் புறப்பட்டு விட்டதாகவும், அதில் அதிபர் புதின் இருக்கிறாரா என்பது குறித்து தெரியவில்லை  என கூறப்படுகிறது.

குண்டு வீச்சு சட்டம் கேட்டு அங்குள்ள மக்கள் அலறி அடித்து ஓடும் காட்சிகள் வெளியாகியுள்ளன. வாக்னர் படை முன்னேறுவதை தடுக்க தலைநகர் நோக்கி செல்லும் சாலையில் உள்ள பாலங்களை குண்டு வீசி அழித்தது ரஷ்ய ராணுவம். மாஸ்கோ செல்லும் வழியில் ஒவோரோனேஸ் என்ற இடத்தில் வாக்னர் படை கைப்பற்றிய எண்ணெய் கிடங்குகள் மீது  ரஷ்ய ராணுவ ஹெலிகாப்டர்கள் குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. இதுதொடர்பான காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.

லிப்பெட்ஸ்க் பகுதியில் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என ராணுவம் அறிவுறுத்தி வருகிறது. மேலும், ரஷ்யாவில் நடக்கும் நிகழ்வுகளை உன்னிப்பாக கவனித்து வருவதாக பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார். பொதுமக்களை பாதுகாப்பதில் ரஷ்ய ராணுவம் – கிளர்ச்சியாளர்கள் உறுதி செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். ரஷ்யாவில் தனியார் ராணுவ குழுவாக செயல்பட்டு வந்த வாக்னர் படை அந்நாட்டுக்கு எதிராக திரும்பியுள்ளது. உக்ரைனில் ரஷ்ய ராணுவத்திற்கு ஆதரவாக இருந்த நிலையில், திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.