ஒளிப்பதிவு திருத்த சட்டம் திரைத்துறையினரின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் – நடிகர் கார்த்திக்!

ஒளிப்பதிவு திருத்த சட்டம் தொடர்பாக நடிகர் கார்த்திக் தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசியுள்ளார். 

மத்திய அரசால் கொண்டுவரப்பட்டுள்ள ஒளிப்பதிவு திருத்த சட்ட மசோதாவை எதிர்த்து திரையுலகினர் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் கார்த்திக் இதுகுறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களை சந்தித்து பேசியுள்ளார். அதன் பின்பதாக செய்தியாளர்களுக்கு நடிகர் கார்த்தி பேட்டியளித்துள்ளார். அப்பொழுது பேசிய அவர், ஒன்றிய அரசால் கொண்டுவரப்பட்டுள்ள ஒளிப்பதிவு திருத்த சட்ட மசோதாவால் திரையுலகினரின் வாழ்க்கை பாதிக்கப்படும் என கூறியுள்ளார்.

இந்த புதிய சட்டத்தால் இனி வரவுள்ள படங்கள் மட்டுமல்லாமல் ஏற்கனவே ஒளிபரப்பு செய்யப்பட்ட படங்களுக்கும் ஆபத்து தான் எனவும் கூறியுள்ளார். இது திரையுலகினரின் கருத்து சுதந்திரத்தையும் வாழ்வாதாரத்தையும் சேர்த்து பாதிக்கிறது எனவும் கூறியுள்ளார். மேலும், எங்களுக்கு தமிழக அரசின் ஒத்துழைப்பும் ஆதரவும் தேவை என்பதால் தான் நாங்கள் தமிழக முதல்வரை அணுகியிருக்கிறோம் எனவும் விளக்கமளித்துள்ளார்.