பாலியல் வன்கொடுமையால் கொலை…சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிவாரணம்.!

Puducherry: புதுச்சேரியில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 9 வயது சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலம் சோலை நகரில் கடந்த 2ஆம் தேதி மாயமான 9 வயது சிறுமி, 3 நாட்கள் கழித்து நேற்று அதே பகுதியில் உள்ள வாய்க்காலில் இருந்து சாக்கு மூட்டையில் கட்டியபடி, சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.

READ MORE – தூக்கில் போடுங்க…புதுச்சேரி சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்.! வலுக்கும் போராட்டம்.!

இந்த சம்பவம் தொடர்பாக விவேகானந்தன் (59), கருணாஸ்-ஐ (19) கைது செய்து விசாரித்ததில், பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்வதாக வாக்கு மூலம் பெற்றனர். தற்பொழுது, புதுச்சேரியில் சிறுமி கொலை வழக்கில் போராட்டக் களமாக மாறியுள்ளது. மேலும், குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும் வரை சிறுமியின் உடலை வாங்க மாட்டோம் என புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியிடம் சிறுமியின் தந்தை அழுத்தமாக வலியுறுத்தியுள்ளார்.

READ MORE – தண்ணீருக்கு அடியில் மெட்ரோ ரயில்… பிரதமர் மோடி முதல் பயணம்.!

முன்னதாக, சிறுமி கொலைக்கு நீதி வழங்க கோரி பல்வேறு பகுதிகளில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், காவல்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் ரங்கசாமி ஆலோசனையில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில், கொலை செய்யப்பட்ட சிறுமிக்கு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் உடற்கூராய்வு செய்யப்பட்டது. அந்த உடற்கூராய்வில் பாலியல் தொல்லை கொடுத்து தான் சிறுமி கொலை செயற்பட்டார் என உறுதியானது.

READ MORE – சடலமாக மீட்கப்பட்ட 9 வயது சிறுமி…புதுச்சேரியில் பரபரப்பு.!

இதனிடையே, படுகொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிவாரணம் அறிவித்ததோடு, குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி உறுதியளித்துள்ளார். இதற்கிடையில், குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்க வலியுறுத்தியும் சமூக ஆர்வலர்கள், இளைஞர்கள், பெண்கள் ஒன்றுதிரண்டு கடற்கரை மற்றும் சாலைகளில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Leave a Comment