ஆளுநர் செயல்பாடு.! சட்டப்பேரவையில் தனித்தீர்மானம் கொண்டு வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

ஆளுநர் செயல்பாடு குறித்து சட்டப்பேரவையில் இன்று தனித்தீர்மானமானத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வரவுள்ளார்.

தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்றது முதலே தமிழக அரசுக்கும், ஆளுநர் ரவிக்கும் இடையே கருத்து மோதல் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. சட்ட மசோதாக்களுக்கு கையெழுத்திடாமல் இருப்பது , பொதுவெளியில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசுவது என ஆளுநரின் நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.

ஆளுநரின் பேச்சு :

அண்மையில் கூட  குரூப் 1 தேர்வெழுதும் மாணவர்கள் மத்தியில் உரையாற்றும் போது, மசோதாக்கள் கையெழுத்திடாமல் கிடப்பில் போடப்பட்டால் அது நிராகரிக்கப்பட்டதாக தான் அர்த்தம். ஸ்டெர்லைட், கூடங்குளம் அணுஉலைக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்களுக்கு வெளிநாட்டில் இருந்து பணம் வந்தது என கூறினார்.

கண்டன ஆர்பாட்டம் :

ஆளுநர் ரவி கூறிய கருத்துக்கள் தமிழக அரசியலில் பெரும் எதிர்பலைகளை ஏற்படுத்தியது . ஆளுநர் கூறிய கருத்துக்களுக்கு எதிராக திமுக உள்ளிட்ட அதன் கூட்டணி கட்சியினர் நாளை மறுநாள் கண்டன ஆர்ப்பாட்டத்தை அறிவித்துள்ளனர்.

தனி தீர்மானம் :

இந்நிலையில், இன்று தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் நடவடிக்கை குறித்து  தனி தீர்மானம் ஒன்றை முதல்வர் மு.க.ஸ்டாலின், கொண்டு வரவுள்ளார். இந்த தீர்மானத்தில் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களுக்கு ஆளுநர் கையெழுத்திட கால அவகாசம் நிர்ணயிக்கப்பட உள்ளது.

Leave a Comment