கிருஷ்ணகிரி ஆணவ கொலை.! சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்.!

சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்து வருகிறார்.  

இன்று நடைபெற்று வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கிருஷ்னகிரியில் நடந்த ஆணவ படுகொலை பற்றி எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.

இளைஞர் கொலை :

இந்த கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில் கூறினார். அதில், கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட கிட்டம்பட்டியை சேர்ந்த ஜெகன் எனும் 28வயது இளைஞர் கொலை செய்யப்பட்டுளளார்.

அதிமுக கிளை செயலாளர் :

கடந்த 21ஆம் தேதி மதியம் 1.30 மணி அளவில் கேஆர்பி அணை அருகே வந்து கொண்டிருந்த போது, அதிமுக கிளை செயலாளர் சங்கர் உட்பட 3 பேர் பயங்கர ஆயுதங்கள் கொண்டு ஜெகனை தாக்கியதில் ஜெகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

காதல் திருமணம் :

அதிமுக கிளை செயலாளரான சங்கரின் மகள் கல்லூரியில் 2ஆம் ஆண்டு படித்து வந்த்துள்ள மாணவி, வீட்டை விட்டு வெளியேறி ஜெகன் உடன் காதல் திருமணம் செய்து கொண்டுள்ளார் என தகவல் தெரிவிக்கிறது.

காவல்துறை நடவடிக்கை :

இச்சம்பவத்தில் ஈடுபட்ட சங்கர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இது போன்ற நிகழ்வுகள் நடைபெறாத வண்ணம் இருக்க அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைவரும் ஒன்றாக இணைந்து ஆணவ கொலைக்கு எதிராக செயல்பட வேண்டும்.

Leave a Comment