இனியும் காலம் தாழ்த்த கூடாது.! சேது சமுத்திர திட்டம்.! முதல்வர் மு.க.ஸ்டாலின் தீர்மானம்.!

தமிழக சட்டப்பேரவையில், ராமேஸ்வரம் கடற்கரையில் சேது சமுத்திர திட்டம் நிறைவேற்றுவது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டுவந்தார். 

இன்று தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சேது சமுத்திர திட்டதிற்காக தீர்மானத்தை கொண்டுவந்தார். அவர் அந்த தீர்மானம் பற்றி கூறுகையில், சேது சமுத்திர திட்டம் எதற்காக கொன்டு வரப்பட்டது. நிதி எவ்வளவு ஒதுக்கப்பட்டது, தற்போதைய நிலை என்ன என பல விஷயங்களை குறிப்பிட்டார்.

அதில், பல ஆண்டுகள் பொறியாளர்கள் ஆய்வு செய்து இந்த திட்டத்தை வரையறை செய்தனர். அப்போது சேது சமுத்திர திட்டத்தின் வழித்தடம் எது என்பது உறுதி செய்யப்பட்டது. அதன் பிறகு கடந்த 2004 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி காலத்தில்  2,427 கோடியில் தொடங்கப்பட்ட இந்த திட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டதால் அதன் பலன்கள் முழுதாக கிடைக்கப் பெறவில்லை.

சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்த விடாமல் சில சக்திகள் முயல்வது நாட்டின் வளர்ச்சிக்கு எதிரானது. எந்த காரணத்தை கூறி முட்டுக்கட்டை போடப்பட்டதோ அதையே நிராகரிக்கும் வகையில் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் அண்மையில் மாநிலங்களவையில் ராமேஸ்வரம் கடற்பகுதியில் இருந்தவரின் எந்த மாதிரியான கட்டுமானம் என்பதை கூறுவது கடினம் என கூறியுள்ளார் .

இவ்வாறு ஒன்றிய அரசு கூறியுள்ள நிலையில் சேது சமுத்திர திட்டத்தை இணையும் நிறைவேற்றாமல் இருப்பது தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருக்கும்.  இந்த திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசுக்கு அனைத்து ஒத்துழைப்பையும் தமிழக அரசு வழங்கும். என சேது சமுத்திர திட்டம் குறித்த தீர்மானத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

 

 

Leave a Comment