1160 கோடி செலவில் சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை.! மத்திய அமைச்சர் தகவல்.!

நாடாளுமன்ற இரு அவைகளிலும் மழைக்கால கூட்டத்தொடர் கடந்த வாரம் துவங்கி நடைபெற்று வருகிறது. இதில் நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் எழுத்துபூர்வமாக கேட்கும் அந்தந்த துறை அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.

அதன்படி, நெடுசாலைத்துறை பற்றிய கேள்விக்கு மத்திய நெடுசாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி பதில் அளிக்கையில், சென்னை – பெங்களூரு இடையே தேசிய நெடுஞ்சாலையின் பராமரிக்க அதனை மேம்படுத்த 1,160 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார்.