கிறிஸ்துமஸ் விழாவை சாக்லேட் கேக்குடன் கொண்டாடுவோம்….!!!

பலகாரம் இல்லாத பண்டிகை நன்றாகவே இருக்காது. பண்டிகை கொண்டாடிய திருப்தியும் இருக்காது. எனவே எல்லா பண்டிகைக்கும் பலகாரம் என்பது மிக அவசியமான ஒன்று. பலகாரங்கள் பண்டிகையின் சிறப்பு அம்சமாக உள்ளது. இப்பொது கிறிஸ்துமஸ் பலகாரமான சாக்லேட் கேக் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள் :

  • வெண்ணெய் – 150 கிராம்
  • சர்க்கரை – 200 கிராம்
  • மைதா – 250 கிராம்
  • முட்டை – 3
  • பேக்கிங் பவுடர் – 1 டேபிள் ஸ்பூன்
  • கொதி நீர் – அரை கப்
  • கோக்கோ பவுடர் – 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை :
கோக்கோ பவுடரை வெந்நீரில் கட்டியில்லாமல் கலக்கி வைத்து கொள்ள வேண்டும். மைதாவையும் பேக்கிங் பவுடரையும் 3 முறை சலித்து கொள்ள வேண்டும்.
வெண்ணெயையும்  பொடித்த சர்க்கரையும் நன்கு கலந்து வைத்துக்கொள்ள வேண்டும். பின் அதனுடன் ஒவ்வொரு முட்டையாக சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின் மைதா கலவையையும், கோக்கோ கலவையையும் மாற்றி மாற்றி கொஞ்சம் கொஞ்சமாக வெண்ணெய் கலவையில் சேர்த்து கொண்டே கலக்க வேண்டும்.
அதன் பின் அதனை அவனில் வைத்து 160 டிகிரியில் 25-35 நிமிடங்கள் வேக வைக்க வேண்டும். கான் பிறகு ஆரிய உடன் துண்டுகளாக வெட்டி பரிமாறி கொள்ளலாம்.

Leave a Comment