#BREAKING : சிங்கப்பூரிலும், ஜப்பானிலும் நாம் நினைத்தபடி வெற்றிகரமாக பயணம் அமைந்துள்ளது – முதல்வர் கடிதம்

தமிழக அரசு வெளித்தன்மையுடன் செயல்படுகிறது என்ற நம்பிக்கையை முதலீட்டாளர்களுக்கு ஏற்படுத்தி உள்ளேன் என தொண்டர்களுக்கு முதல்வர் கடிதம். 

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது 9 நாட்கள் வெளிநாட்டு பயணத்தை முடித்துக் கொண்டு இன்று தமிழக திரும்ப உள்ள நிலையில், தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், பத்தாண்டு கால இருட்டை ஒவ்வொரு பகுதியாக விரட்டி, விடியலைத் தந்து கொண்டிருக்கிறது திராவிட மாடல் அரசு; இன்னும் சில பகுதிகளில் இருட்டு ஒளிந்து கொண்டிருக்கிறது அதையும் விரட்டி, ஒளி மிகுந்த தமிழ்நாட்டை உருவாக்குவதே நம் இலக்கு.  சிங்கப்பூரிலும், ஜப்பானிலும் நாம் நினைத்தபடி வெற்றிகரமாக பயணம் அமைந்துள்ளது. தமிழகத்திற்கு ரயில்வே திட்டங்கள் புறக்கணிக்கப்படுவதை மத்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.

நத்தை வேக ரயில்வே திட்டங்கள் வேகம் பெற்று இந்தியாவில் புல்லட் ரயிலில் இயக்கப்பட வேண்டும். தமிழ்நாடு மீது சிங்கப்பூர், ஜப்பான் முதலீட்டாளர்களுக்கு  நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறேன். தமிழக அரசு வெளித்தன்மையுடன் செயல்படுகிறது என்ற நம்பிக்கையை முதலீட்டாளர்களுக்கு ஏற்படுத்தி உள்ளேன் என தெரிவித்துள்ளார்.