#BREAKING : செந்தில் பாலாஜி சகோதரர் மனைவி கட்டி வரும் பங்களாவை முடக்கிய அமலாக்கத்துறை..!

கரூரில் மூன்றாவது முறையாக செந்தில் பாலாஜி சகோதரர் அசோக் குமார் வீட்டில் அமலாக்கத்துறை மீண்டும் சோதனை நடத்தியது. கரூர் ராம்நகரில் உள்ள கட்டுமான பணி நடைபெற்று வரும் செந்தில் பாலாஜி சகோதரர் அசோக்குமாரின் புதிய வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டது.

இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டியுள்ளனர். அந்த நோட்டீஸில் அசோக்குமாரின் மனைவி நிர்மலா பெயரை குறிப்பிட்டு ஒட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, கரூர் புறவழிச் சாலையில் கட்டி வரும் புதிய பங்களா குறித்த ஆவணங்களுடன் உரிமையாளர் நேரில் ஆஜராக செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாரின் மனைவிக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து, செந்தில் பாலாஜி சகோதரர் அசோக்குமாரின் மனைவி நிர்மலா புதியதாக கட்டி வரும் வீட்டை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. கரூர் புறவழிச் சாலையில் சுமார் 2 ஏக்கரில் கட்டி வரும் புதிய வீட்டை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது.

புதிய வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் 7 மணி நேரமாக சோதனை நடத்திய நிலையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. புதிய வீட்டை விற்பது உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என சார்பதிவாளர் அலுவலகத்திற்கு அமலாக்கத்துறை கடிதம் எழுதி உள்ளது.