#BREAKING : ஆட்சி மாறினாலும் இந்த திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட வேண்டும் – உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் மக்கள் நல பணியாளர்கள் திட்டம் செயல்பாட்டில் இருக்க வேண்டும் உச்சநீதிமன்றம் உத்தரவு.

கடந்த 2011 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் மக்கள் நல பணியாளர்கள் 13,500 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டனர். மக்கள் நல பணியாளர்கள் தொடர்ந்த வழக்கில் மீண்டும் பணி வழங்க சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிட்டது.

இதனையடுத்து, உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அப்போதைய அதிமுக அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் தற்போது தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன்படி மக்கள் நல பணியாளர்கள் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட வேண்டும் என்று தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த, அஜய் ரஸ்தோகி தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு, ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் மக்கள் நல பணியாளர்கள் திட்டம் செயல்பாட்டில் இருக்க வேண்டும். மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டம் போல் மக்கள் நலப் பணியாளர் திட்டமும் செயல்பட வேண்டும்.

ஜெயலலிதா ஆட்சியில் பணியில் இருந்து நீக்கப்பட்டவர்களுக்கு ரூ.7500 ஊதியத்துடன் மீண்டும் பணி வழங்குவதாக திமுக அரசு அறிவித்திருந்தது. ஊதிய நிர்ணயம் என்பது மாநில அரசின் கொள்கை முடிவு அதில் தலையிட முடியாது என உச்சநீதிமன்றம்  தீர்ப்பு வழங்கியுள்ளது.

Leave a Comment