உலகம் முழுவதும் முடங்கிய கூகுள் சேவைகள்.!

பிரபல தேடல் வலைதளமான, கூகுலின் சேவைகள் உலகம் முழுவதும் முடங்கியுள்ளது.

உலகின் மிகப்பெரும் தொழில்நுட்ப நிறுவனமான கூகுலின் சேவைகள், உலகம் முழுவதும் முடங்கியது, முக்கியமாக அதன் ஜிமெயில், யூட்யூப் உள்ளிட்ட சேவைகள் வேலை செய்யவில்லை என அதன் பயனர்கள் தெரிவித்து வந்தனர்.

டௌன்டிடெக்டர் வெளியிட்ட தகவின்படி, ஜிமெயில் இல் 2000க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளதாகவும், அவர்கள் அனைவருக்கும் 502 எரர் வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. இதன் பின் சற்று நேரம் கழித்து யூட்யூப் தளம், ஜிமெயில் உள்ளிட்ட கூகுள் சேவைகள் மீண்டும் செயல்படத்தொடங்கியது.

Leave a Comment