தமிழ்நாடு

வரும் ஜூன்-22 ம் தேதி பாஜக ஆர்ப்பாட்டம் – அண்ணாமலை

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து பாஜக மாநில தழுவிய ஆர்ப்பாட்டம் செய்யப்போவதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி விவகாரத்தில், விஷச்சாராயம் அருந்தி 35 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் திமுக அரசை கண்டித்து வருகின்றனர்.

இந்நிலையில், தமிழக பாஜக தலைவரான அண்ணாமலை அவரது க்ஸ் தலத்தில் இந்த சம்பவத்தை குறித்து மாநிலம் தழுவி ஆர்ப்பாட்டம் செய்யப்போவதாக பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “கள்ளக்குறிச்சியில், கள்ளச்சாராயத்தினால் 35க்கும் அதிகமான உயிர்கள் பறிபோயிருக்கின்றன என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. கள்ளக்குறிச்சிக்கு நேரில் சென்று, உயிரிழந்தவர்கள் குடும்பத்தினரையும், மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களையும் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க உள்ளோம்.

அவர்கள் குடும்பத்தினருக்கு எப்போதும் உறுதுணையாக இருக்கும். திமுக ஆட்சியில் கடந்த இரண்டு ஆண்டுகளில் நடைபெற்றுள்ள கள்ளச்சாராய உயிரிழப்புகள், 1980 காலகட்டத்தில் ஏற்பட்டதைப் போல, தமிழகம் நாற்பது ஆண்டுகள் பின்னோக்கிச் செல்கிறதா என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது.

நேற்றைய தினம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அமைச்சரை பதவி விலக்கம் செய்ய, முதலமைச்சர் திரு ஸ்டாலின் அவர்களைக் கேட்டுக் கொண்டிருந்தோம். ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளில் சுமார் 60 உயிர்கள் கள்ளச்சாராயத்தினால் பறிபோனதற்குப் பின்னரும், முதலமைச்சராகத் தொடர தனக்குத் தார்மீக உரிமை உள்ளதா என்பதை, அவர் எண்ணிப் பார்க்க வேண்டும்.

தமிழகம் முழுவதும் கள்ளச்சாராய விற்பனையைத் தடுக்காமல், பல உயிர்கள் பலியாகும் வண்ணம், தொடர்ந்து மெத்தனப் போக்கில் செயல்பட்டு வரும் திமுக அரசின் கையாலாகாத்தனத்தைக் கண்டித்து, வரும் ஜூன் 22 அன்று பாஜக சார்பாக, மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது என்பதை அறிவித்துக் கொள்கிறேன்”, என கூறி இருந்தார்.

Recent Posts

ரசிகர்களுக்கு ஷாக்..! இந்திய அணியை வீழ்த்தி 1-0 என முன்னிலை பெற்றது ஜிம்பாப்வே ..!

ZIMvIND :  தற்போது நிறைவு பெற்ற இந்திய-ஜிம்பாவே அணி இடையேயான முதல் டி20 போட்டியில் ஜிம்பாப்வே அணி இந்திய அணியை வீழ்த்தி தொடரில் 1-0 என முன்னிலையில்…

4 hours ago

என்னது சங்கீதாவா.? இந்த எழவுக்கு தான் இந்தி வேண்டாம்னு சொல்கிறோம்.! துரைமுருகன் பேச்சு

சென்னை: மத்திய அரசின் புதிய குற்றவியல் சட்டத்திற்கு எதிராக திமுக சார்பில் சென்னையில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டார். கடந்த ஆட்சியில் நிறைவேற்றம் செய்யப்பட்ட…

6 hours ago

சூரியகுமார் யாதவ் கேட்ச் சர்ச்சை ..! ஆஸ்திரேலியா ஊடகத்தை விளாசிய சுனில் கவாஸ்கர் ..!

சுனில் கவாஸ்கர் : இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் சூரியகுமார் யாதவின் கேட்ச் சரி தான் என்று சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறி…

6 hours ago

சித்தா படித்த பட்டதாரிகளே… அரசாங்கத்தில் வேலை செய்ய ரெடியா?

புதுக்கோட்டை : மாவட்டத்தில் தேசிய ஊரக நலவாழ்வு குழுமத்தின் (NRHM) கீழ் புதுக்கோட்டை மாவட்ட சித்த மருத்துவ அலுவலரின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஆயுஷ் பிரிவுகளில் காலியாக…

6 hours ago

உங்க வீட்டிற்கு சூரிய மின்சாரம் வேண்டுமா? SBI கடனுதவி.! முழு விவரம்…

நாம் வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளில் மேற்கூரை சோலார் பேனல்களை அமைக்க, எஸ்பிஐ வங்கி கடனுதவி வழங்குகிறது. அதற்கான தகுதிகள் மற்றும் எவ்வாறு பெற வேண்டும் என பார்க்கலாம்.…

6 hours ago

இனி IITயில் இசை பட்டப்படிப்புகளை படிக்கலாம்.! எங்கு, எப்படி தெரியுமா.?

மண்டி: ஹிமாச்சல் பிரதேசம் மாநிலத்தில் மண்டி IITயில் இசை மற்றும் இசை தெராபி படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இத்திய தொழில்நுட்ப கழகங்கள் (IIT) பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறை…

7 hours ago