எழுத்தாளர் செய்த காரியம்…இது நாகரீகம் இல்ல! மஞ்சும்மல் பாய்ஸுக்காக பொங்கிய பாக்யராஜ்!

Bhagyaraj: மஞ்சும்மல் பாய்ஸ் படம் குறித்து எழுத்தாளர் ஜெயமோகன் விமர்சித்தது மனதுக்கு வருத்தமாக இருப்பதாக இயக்கநர் பாக்யராஜ் தெரிவித்துள்ளார்.

சமீப நாட்களாக அனவைரும் ஆகோ… ஓகோனு பேசிக்கொண்டிருக்கும் மலையாள படம் மஞ்சும்மல் பாய்ஸ். இந்த திரைப்படம் மலையாள சினிமாவை தாண்டி தமிழில் சக்கை போடு போடு வருகிறது.  இந்த படத்தை பார்த்துவிட்டு தமிழ் இயக்குனர்கள் முதல் நடிகர்கள் வரை சமூக வலைத்தளங்களிலும் நேரில் அழைத்தும் பாராட்டினார்கள். இப்படி இருக்கையில், பிரபல எழுத்தாளரான ஜெயமோகன், படத்தை கடுமையாக விமர்சித்து கட்டுரை ஒன்றை எழுதி இருந்தார்.

READ MORE – இனிமேல் நடிக்க போறது இல்ல.? சைலண்டாக முடிந்தது ‘குட் நைட்’ நாயகியின் திருமணம்.!

இவர் விமர்சித்து எழுதிய கட்டுரை பெரும் சர்ச்சையை கிளப்பியது மட்டுமல்லாமல் அவர் மீது தமிழ் சினிமா இயக்குனர்கள் என பலரும் தங்களது கண்டங்களை தெரிவித்தனர். அந்த வரிசையில் இப்பொழுது இயக்குனர் பாக்யராஜ் வருத்தம் தெரிவித்துள்ளார். நடிகை ஆண்ட்ரியா நடித்துள்ள ‘கா’ படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. அந்த விழாவில் பேசிய அவர், ‘கேரளாவில் எடுத்த மஞ்சும்மெல் பாய்ஸ் படத்தை மலையாளத்தை விட இங்கு தான் அதிகமாக ஓடுகிறது, மக்கள் ரசிப்பதால் ஓடுகிறது, இது காலகாலமாக நடக்கிறது.

READ MORE – அவரை நம்பி ஏமாந்துட்டாங்க! சில்க் ஸ்மிதா சீக்ரெட்டை உடைத்த பிரபல நடிகை!

இப்படி படத்தில் ஏதோ இருப்பதால்தான் அந்த படத்தை பார்க்கிறார்கள் கொண்டாடுகிறார்கள். ஆனால், நம்ம தமிழ்நாடு பிரபல எழுத்தாளர் ஒருவர் கடுமையாக விமர்சித்து இருப்பது எனக்கு வருத்தமளிக்கிறது. படத்தை மட்டும் விமர்சனம் செய்திருந்தால் பரவாயில்லை, வேற மாதிரி வார்த்தைகளை விட்டுவிட்டார். அதுல நடித்த கேரள நடிகர்கள் அப்படி, இப்படினு விமர்சனம் செய்துவிட்டார்.

READ MORE – கேரளாவும் என்னோட கோட்டை தான்! கெத்து காட்டும் தளபதி விஜய்!

இது மாதிரி வார்த்தைகளை விட்டது தமிழனுக்கு நாகரிகம் இல்லை பண்பாடும் இல்லை. இப்படி ஒரு எழுத்தாளர் இப்படி விமர்சனம் செய்தது கஷ்டமா இருக்கிறது. ஒரு படத்தை விமர்சனம் செய்வது தப்பு இல்லை. ஆனால், அந்த ஊரு காரங்களே அப்படினு விமர்சனம் செய்தது கஷ்டமான விஷயம்.

இதை பற்றிஅப்போதே நான் பேசியிருப்பேன், ஆனா எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவது போல் இருக்குமோ என்று, அந்த சர்ச்சை ஆரிய பின்பு இப்போது பேசுகிறேன். இதை இப்போது சொல்வதற்கு தமிழர்கள் யாரும் கண்டிக்கவில்லையென கேரள மக்கள் நினைத்துவிட கூடாது’ என்றார்.

Leave a Comment