BGT2023: ஆஸ்திரேலியா உணவு இடைவேளை வரை 75/2 ரன்கள் குவிப்பு.!

இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான 4-வது டெஸ்டில் முதல் நாள் உணவு இடைவேளையின் போது ஆஸ்திரேலியா 75/2 ரன்கள் குவிப்பு.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் விளையாடிவரும் 4 போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் 4-வது மற்றும் கடைசி போட்டி இன்று அகமதாபாத், நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

இதன்படி முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு க்வாஜா-டிராவிஸ் ஹெட் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 61 ரன்கள் குவித்தது. டிராவிஸ் ஹெட்(32 ரன்கள்), லபுஸ்சான்(3 ரன்கள்) இருவரும் ஆட்டமிழக்க அதன்பின் களமிறங்கிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்(2* ரன்கள்) மற்றும் உஸ்மான் க்வாஜா(27* ரன்கள்) எடுத்து களத்தில் விளையாடி வருகின்றனர்.

உணவு இடைவேளையின் போது ஆஸ்திரேலியா 75/2 ரன்கள் குவித்துள்ளது. இந்தியா தரப்பில் அஸ்வின் மற்றும் ஷமி 1 விக்கெட் வீழ்த்தியுள்ளனர்.

Leave a Comment