யூ-டியூப் பிரியர்களே உஷார்…! உங்கள் வங்கி கணக்கு திருடப்பட்டு இருக்கலாம்.! வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்….

யூடியூப் வீடியோக்கள் உங்கள் வங்கிக் கணக்கு எண், சிவிவி எண் மற்றும் கடவுச்சொல்லை திருடியிருக்கலாம் என்று கிளவுட்செக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

யூடியூப் :

Youtube

கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட் நிறுவனத்திற்கு சொந்தமான யூடியூப் உலகம் முழுவதும் அனைவராலும் பயன்படுத்தப்படும் மிகப்பெரிய வீடியோ ஸ்ட்ரீமிங் தளமாகும். இதில் பல்லாயிரக்கணக்கான வீடியோக்கள் நாள்தோறும் பதிவிடப்படும் செய்யப்படும். அந்த விடியோக்களை மில்லியன் கணக்கான பார்வையாளர்கள் தங்கள் மொபைல் போன் மற்றும் கணினிகளில் இருந்து இணையதளத்தில் வாயிலாக கண்டு ரசிக்கின்றனர்.

மால்வேர் :

malware

ஆனால் யூடியூப் வீடியோக்களில் மால்வேர் எனப்படும் ஒருவகை வைரஸ் இருப்பது என்பது பலருக்குத் தெரியாது. அது பார்வையாளர்களின் வங்கிக் கணக்கு எண், சிவிவி எண் மற்றும் கடவுச்சொல்லை திருடுவதற்கு வாய்ப்புள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். செயற்கை நுண்ணறிவு சைபர் செக்யூரிட்டி நிறுவனமான கிளவுட்செக்கின் ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, யூடியூப் வீடியோக்களில் ஆபத்தான மால்வேர்களின் எண்ணிக்கை 200-300% ஏற்றம் அடைந்துள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

இன்போஸ்டீலர் :

malware 1

இன்போஸ்டீலர் (Infostealers) என அழைக்கப்படும் இந்த மால்வேர், தவறான பதிவிறக்கங்கள், போலி இணையதளங்கள் மற்றும் யூடியூப் பயிற்சி விடியோக்கள் மூலம் பரவுகிறது. ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 5 லிருந்து 10 கிராக் சாப்ட்வேர்களை crack software) பதிவிறக்கம் செய்யும் வீடியோக்கள், மால்வேர் இணைப்புகளுடன் யூடியூப்பில் பதிவேற்றப்படுகின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தகவலைத் திருட வாய்ப்பு:

CloudSEK

நவம்பர் 2022 ஆம் ஆண்டு முதல் யூடியூப் வீடியோக்களில் விடார்(Vidar), ரெட்லைன்(RedLine) மற்றும் ரக்கூன் (Raccoon) போன்ற தகவல்களை திருடும் மால்வேர் வைரஸ்கள் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இவை கடவுச்சொற்கள், கிரெடிட் கார்டு தகவல், வங்கி கணக்கு எண்கள் மற்றும் பிற ரகசியத் தகவல்களைத் திருடுவதற்கு வாய்ப்புள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Comment