Categories: இந்தியா

பிபிசி ஆவணப்படம் முடக்கம் – பிப்.6ல் விசாரணை!

பிபிசி ஆவணப்படத்தை மத்திய அரசு முடக்கியதற்கு எதிரான வழக்கு பிப்ரவரி 6-ஆம் தேதி விசாரணை.

குஜராத் கலவரம் குறித்தான பிபிசி ஆவணப்படத்தை மத்திய அரசு முடக்கியதற்கு எதிரான வழக்கு பிப்ரவரி 6-ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. 2002-ம் ஆண்டு குஜராத் கலவரம் பற்றி பிபிசி செய்தி நிறுவனம் வெளியிட்ட ஆவணப்படத்தை மத்திய அரசு முடக்கியுள்ளது.

2002-ல் குஜராத் கலவரம் தொடர்பான ஆவண படத்தில் அப்போது குஜராத் முதல்வராக பதவியில் இருந்த பிரதமர் மோடி குறித்து தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக கூறி குஜராத் கலவரம் தொடர்பான ஆவணப்படத்தை தடை செய்தது மத்திய அரசு. பிரதமர் மோடி மற்றும் குஜராத் கலவரங்கள் குறித்த பிபிசியின் ஆவணப்படத்திற்கு எதிரான மத்திய அரசின் தடை நடவடிக்கை குறித்து அரசியல் தலைவர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், குஜராத் கலவரம் தொடர்பான பிபிசி-யின் ஆவணப்படத்தை மத்திய அரசு முடக்கியதற்கு எதிரான பொதுநல மனுவை பிப்.6ம் தேதி விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது. பொதுநல மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தலைமை நீதிபதி சந்திர சூட் ஒப்புதல் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

5ஆம் கட்டத் தேர்தல்: 49 தொகுதிகளில் பரப்புரை இன்றுடன் ஓய்கிறது.!

சென்னை: 5ஆம் கட்ட தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களில் இன்று மாலை 5 மணியுடன் பரப்புரை நிறைவடைகிறது. 5 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் உட்பட 49…

5 seconds ago

ஒரு வழியா முடிஞ்சது! ‘கோட்’ படத்தின் சூப்பர் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!

சென்னை : கோட் படத்தின் VFX பணிகள் நிறைவடைந்துவிட்டதாக இயக்குனர் வெங்கட் பிரபு அறிவித்துள்ளார். இயக்குனர் வெங்கட் பிரபு தற்போது நடிகர் விஜய்யை வைத்து கோட் படத்தினை…

19 mins ago

பிரதமரின் தோல்வி பயம் என்னவெல்லாம் செய்யும்.? முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்..

சென்னை: தோல்வி பயத்தில் பாஜகவினர் தொடர்ந்து வீண்பழி சுமத்துகிறார்கள் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டிவருகிறது. 7 கட்ட தேர்தலில்…

29 mins ago

தொடர் மழை…நெல்லை மணிமுத்தாறு அருவியில் குளிக்க தடை!

சென்னை : நெல்லை மணிமுத்தாறு அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்…

49 mins ago

சுற்றுலாப் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 8 பேர் பலி!

சென்னை: ஹரியானா மாநிலம் நூஹ் என்ற இடத்தில் சுற்றுலாப் பேருந்து தீப்பிடித்து 8 பேர்உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். ஹரியானா மாநிலம் நூஹ் என்ற இடத்தில் சுற்றுலாப்…

51 mins ago

வீட்டுக்குள் செடி வளர்க்கிறீர்களா? அப்போ இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க.!

Plant-வீட்டிற்குள் எந்தெந்த செடிகளை வளர்க்கலாம் என்றும் அதனால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் பற்றியும் இப்பதிவில் காணலாம். தற்போது மாறி வரும் நவீன உலகில் காடுகள் ,வயல்வெளிகள் இருக்கும்…

1 hour ago