Banned Gadgets: இந்த சிறிய பொருள்களால் இவ்வளவு பெரிய ஆபத்தா..! அதான் இப்படி பன்னிட்டாங்க..?

நவீன மயமாகி வரும் உலகில் பல கேஜெட்டுகள் புதிது புதிதாக அறிமுகம் செய்யப்பட்டு வந்தாலும், அதனால் பெரிய அளவில் ஆபத்துகள் வராத வண்ணமே உருவாக்கப்படுகின்றன. ஆனால், முன்பு சிறியதாக உருவாக்கப்படும் பொருட்கள் கூட மக்களின் சாதாரண வாழ்க்கைக்கு இடையூறு விளைவிக்கும் வண்ணம் இருந்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு அத்தகைய கேஜெட்டுகள் தடைசெய்யப்பட்டுள்ளன.

மேலும், ஒரு கேஜெட்டை வாங்குவது சட்டப்பூர்வமாக இருக்கின்ற காரணத்தினால், அதைப் பயன்படுத்துவது என்பதும் சட்டப்பூர்வமானது என்று அர்த்தமாகிவிடாது. கேஜெட்களை தடை செய்வதற்கான காரணங்கள் மாறுபடும். சில கேஜெட்டுகள் ஆபத்தானவை என்று கருதப்படுவதால் தடை செய்யப்படுகின்றன. ஏனெனில் அவை முக்கியமான செயல்பாடுகளை சீர்குலைக்கவோ அல்லது குறுக்கிடவோ பயன்படுத்தப்படலாம்.

அவ்வாறு தடை செய்யப்பட்டுள்ள சில கேஜெட்டுகளையும், அதை என் தடை செய்தார்கள் என்ற காரணத்தையும் காணலாம்.

லாக் பிக்கிங் கிட்கள்:

நீங்கள் உங்கள் வீடு மற்றும் அலுவலகங்களை பூட்டி விட்டு சாவியை எங்காவது மறந்துவிடுவீர்கள். அந்த சமயத்தில் இந்தக் கருவிகள் பயன்படுத்தி பூட்டை உடைத்து உள்ளே நுழைய முடியும். இது பெரும்பாலும் நல்ல பொருளாக இருந்தாலும் திருடர்களுக்கு இது சாதகமாக அமைந்து விடுகிறது. எனவே, அவை தடை செய்யப்டுகின்றன. இருந்தும் இன்னும் சில இடங்களில் இந்த கருவி பயன்பாட்டில் உள்ளது. அதன் பயன்பாட்டைத் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

லேசர்கள்:

அதிக ஆற்றல் கொண்ட லேசர் லைட்டுகள் ஒரு விதமான ஒளிக்கற்றையை வெளியிடுகின்றன. இது ஒரு நபரின் கண்களை நோக்கி செலுத்தினால் கண் பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் ஏற்படும் ஆபத்துகள் தெரியாமல், இந்த லைட்டுகளை குழந்தைகளும் விளையாடுவதற்கு பயன்படுத்துகின்றனர். இதன் காரணமாக, பல அரசாங்கங்கள் லேசர் லைட்டுகளை பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளன. அதன்படி அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா மற்றும் ஆஸ்திரேலியாவில் தடைசெய்யப்பட்டுள்ளது.

ஸ்பை கேஜெட்டுகள்:

ஒரு தனி நபர் அல்லது ஒரு நிறுவனத்தின் செயலை ரகசியமாக கண்காணிக்க வடிவமைக்கப்பட்ட சில கேஜெட்டுகள் பொதுமக்கள் பயன்டுத்த தடை செய்யப்பட்டுள்ளது. இதில் ரகசிய கேமராக்கள், ஆடியோ பதிவு சாதனங்கள் அல்லது ஜிபிஎஸ் ட்ராக்கர்கள் போன்றவை அடங்கும். இதனால் ஒருவரின் தனியுரிமை செயலுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. இருந்தும் இந்த சாதனங்கள் ஆன்லைனில் விற்கப்பட்டுதான் வருகிறது.

ஜாமர்கள்:

இந்த சாதனங்கள் செல்போன் சிக்னல்களைத் தடுக்க வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த சாதனம் காவல் துறை அதிகாரிகளால் மட்டுமே பயன்படுத்தப் படுகிறது என்று நாம் நினைத்தாலும், பல முக்கியமான இடங்களில் ஒரு சிலர், இதனைப்பயன்படுத்தி தவறான செயல்களில் ஈடுபடுகின்றனர். செல்போன் ஜாமர்களைப் போலவே, ஜி.பி.எஸ் ஜாமர்களும் சிக்னல்களைத் தடுக்கின்றன. இது விமான நிலையங்கள் மற்றும் அவசர சேவைகள் போன்ற ஜிபிஎஸ்-ன் தேவைகள் அதிகம் உள்ள பகுதிகளில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தலாம். எனவே, பாதுகாப்பு காரணங்களுக்காக அவை தடை செய்யப்படுகின்றன.

ஸ்டன் கன்ஸ்:

இவையனைத்தையும் விட இந்த ஸ்டன் கன் மிகுந்த ஆபத்துள்ள கேஜெட் ஆகும். ஏனென்றால், இதில் உருவாகும் மின்சாரம் ஆனது, ஒரு நபரின் தசை செயல்பாடுகளை சில நிமிடங்களை நிறுத்தி விடும். இதனால் காயம் என்பது ஏற்படாது என்றாலும் அதிகப்படியான வழியை உண்டாகும். இந்திய ஆயுதச் சட்டத்தின் கீழ், ஸ்டன் கன்கள் தடைசெய்யப்பட்ட ஆயுதங்களாகக் கருதப்படுகின்றன. உரிமம் பெற்ற காவல்துறை அதிகாரிகள் மட்டுமே ஸ்டன் துப்பாக்கியைப் பயன்படுத்த முடியும்.