ஐயோ! கொளுத்தும் வெயிலில் பெங்களூர்..இதுவரை இல்லாத அளவுக்கு பதிவு!

Bangalore Heat Wave : பெங்களூரில் இந்த ஆண்டு அதிகபட்சமாக 38 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை  பதிவாகியுள்ளது.

கோடை காலம் தொடங்கி வெயிலின் தாக்கம் பல மாநிலங்களில் அதிகரித்து வரும் நிலையில், பெங்களூரில் மிகவும் கடுமையாக வெயிலின் தாக்கம் இருக்கிறது. குறிப்பாக, இன்று பெங்களூரில் 38 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இது இந்த ஆண்டு அதிகபட்சம் மற்றும் கடந்த 8 ஆண்டுகளில் இரண்டாவது அதிக எண்ணிக்கையாக பதிவாகி இருக்கிறது.

இதற்கு முன்னதாக பெங்களூரில் கடந்த 2016 -ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 39.2 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை பதிவாகி இருந்தது. இந்த வெப்ப நிலை தான், பெங்களுரில் பதிவனதிலேயே அதிகபட்ச வெப்பநிலை என்று கூறப்படுகிறது. அந்த வெப்ப நிலையை தொடர்ந்து இன்று வெயிலின் தாக்கம் பெங்களூரில் அதிகமாகி இருக்கும் நிலையில், 38 டிகிரி செல்சியஸ் ஆக பதிவாகி இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இந்த ஆண்டில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபட்சமாக பதிவானது இன்று தான்.

அதைப்போல, இதற்கு முன்னதாக கடந்த மார்ச் 30-ஆம் தேதி பெங்களூரில் 37 டிகிரி செல்சியஸ்  வெப்ப நிலை பதிவாகி இருந்தது. இது கடந்த ஐந்து ஆண்டுகளில் மார்ச் மாதத்தில் பதிவான அதிகபட்ச வெப்பநிலையாகும். மார்ச் 2017 இல், பெங்களூரில் 37.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி இருந்தது. தொடர்ச்சியாக இப்படி வெப்ப நிலை பெங்களூரில் அதிகரித்து வருவதன் காரணமாக மக்கள் கடும் அவதியில் உள்ளனர்.

பெங்களூரில் இன்று 38 டிகிரி செல்ஸியஸ் வெப்ப நிலை பதிவாகி இருக்கும் நிலையில், கர்நாடகாவின் சில பகுதிகளில் ஏற்கனவே 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது, எனவும் பாகல்கோட்,  கலபுர்கி, சித்ரதுர்கா, தாவாங்கேரே, கொப்பல், ராய்ச்சூர், விஜயபுரா, பிதார், யாத்கிர்,  கடக், ஹாவேரி, பல்லாரி, சிக்க பல்லாபுரா, மைசூரு, தும்கூர், கோலார், மாண்டியா,  மற்றும் விஜயநகர ஆகிய மாவட்டங்களிலும்  மழைபெய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக  இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும், பெங்களூரில் ஹாசன்,ராய்ச்சூர், தாவங்கேரே, பெலகாவி, சித்ரதுர்கா, பல்லாரி, தும்கூர், சாமராஜநகர்,பிதார், கலபுர்கி, யாத்கிர், சிக்கமகளூரு, ஆகிய இடங்களில் வரும் ஏப்ரல் 30-ஆம் தேதி முதல் மே 3 -ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது.