டெல்லி முக்கிய சாலைக்கு டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் பெயர்.! டெல்லி மாநகராட்சி நடவடிக்கை.! 

டெல்லியில் ஒளரங்கசீப் சாலையானது அப்துகலாம் சாலை என மாற்றி பெயர் பலகை நிறுவப்பட்டுள்ளது.

டெல்லியின் முக்கிய பகுதியில் உள்ள சாலைக்கு ஒளரங்கசீப் சாலை என பெயரிடப்பட்டு இருந்து. கடந்த 2015 ஆம் ஆண்டே அதன் பெயர் மாற்றப்பட்டு முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் என வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதனை அடுத்து தற்போது அதன் பெயர் பலகை மாற்றியமைக்கபட்டு உள்ளது. தற்போது ஒளரங்கசீப் சாலை டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் சாலை என மாற்றம் செய்து புதிய பெயர் பலகையை டெல்லி மாநகராட்சி நிறுவியுள்ளது.