மாணவர்கள் கவனத்திற்கு! மாதம் ரூ.1000.. முதலமைச்சர் திறனாய்வு தேர்வுக்கு ஆக.18 வரை விண்ணப்பிக்கலாம் !

முதலமைச்சர் திறனாய்வு தேர்வுக்கு ஆகஸ்ட் 18-ஆம் தேதி வரை பிளஸ் 1 மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. செப்.23-ஆம் தேதி நடக்க உள்ள தேர்வுக்கு அரசு பள்ளிகளில் பயிலும் 11-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம். அதன்படி, www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூர்த்தி செய்த படிவங்களை ஆகஸ்ட் 18-ம் தேதிக்குள் ரூ.50 கட்டணத்துடன் சேர்த்து அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் ஒப்படைக்க வேண்டும். அரசு பள்ளி மாணாக்கர்களின் திறன்களை கண்டறிந்து ஊக்குவிக்க முதலமைச்சர் திறனாய்வு தேர்வு நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வில் தகுதி பெறும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 வீதம் இளநிலை பட்டப்படிப்பு வரை வழங்கப்படும் என்றுள்ளனர்.