AsianGames2023: ஆசிய தடகளம் – தமிழ்நாட்டை சேர்ந்த 10 பேர் தேர்வு!

சீனாவில்  நடைபெறும் ஆசிய தடகள போட்டி செப்டம்பர் 23-ஆம்  தேதி முதல் அக்டோபர் 8-ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. இந்த நிலையில் சீனாவில் நடைபெறும் ஆசிய விளையாட்டு போட்டிகளில் தமிழ்நாட்டை சேர்ந்த 10 தடகள வீரர்கள் தேர்வாகியுள்ளனர். ஆசிய தடகள போட்டியின் இந்திய அணியில் 65 வீரர்கள் தேர்வாகியுள்ள நிலையில், இதில் தமிழ்நாட்டை சேர்ந்த 10 பேர் தேர்வாகி உள்ளனர்.

சீனாவின் ஹாங்சோ நகரில் வரும் செப்டம்பர் மாதம் 23-ம் தேதி ஆசிய விளையாட்டு போட்டி தொடங்குகிறது. இதில் இந்தியாவில் இருந்து கலந்துகொள்வதற்கு 850 வீரர், வீராங்கனைகளை இந்திய ஒலிம்பிக் சங்கம், மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்தது. இந்த பட்டியலில் 634 வீரர், வீராங்கனைகளுக்கு அனுமதி வழங்கி மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.

ஆசிய விளையாட்டு போட்டிகளில் 38 விளையாட்டுகளில் பங்கேற்பவர்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியிருந்தது. அதன்படி, டிராக் மற்றும் பீல்டு (தடகளத்தில்) பிரிவில் 65 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் 34 வீரர்களும், 31 வீராங்கனைகளும் அடங்குவர். இந்த நிலையில், இந்திய தடகள அணியில் 65 வீரர்கள் தேர்வாகியுள்ள நிலையில், இதில் தமிழ்நாட்டை சேர்ந்த 10 பேர் தேர்வாகி உள்ளனர்.

இந்திய தடகள அணியில் இடம் பிடித்துள்ள தமிழ்நாடு வீரர்கள் பட்டியல்:

  • ஜெஸ்வின் ஆல்ட்ரின் – long jump
  • பிரவின் சித்திரவேல் – triple jump
  • சந்தோஷ் குமார் – 400 meter hurdles
  • ஆரோக்கிய ராஜிவ் – 400 meter relay
  • ராஜேஷ் ரமேஷ் – 400 meter relay
  • பவித்ரா வெங்கடேஷ் – Pole vault
  • நித்யா ராம்ராஜ் – 100 meter hurdles
  • வித்யா ராம்ராஜ் – 400 (H) and Relay
  • சுபா வெங்கடேசன் – 400 meter relay
  • அருள் ராஜலிங்கம்- 400 meter relay