ஆசிய விளையாட்டுப் போட்டி: 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் ரமிதா வெண்கலம் வென்று அசத்தல்.!

சீனாவின் ஹாங்சோவ் நகரில் 19வது ஆசிய விளையாட்டு போட்டி ஆனது கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக தொடங்கியது. இந்த ஆசிய விளையாட்டு போட்டியை சீன அதிபர் ஜி ஜின்பிங் தொடங்கி வைத்தார். சீனாவில் தொடங்கியுள்ள 19வது ஆசிய விளையாட்டு போட்டி அக்டோபர் 8ம் தேதி வரை நடைபெற உள்ளது.

45 நாடுகளை சேர்ந்த 12,500 வீரர், வீராங்கனைகள் ஆசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கின்றன. ஆசிய போட்டியில் பங்கேற்க இந்திய அணியில் இடம்பெற்றுள்ள 699 வீரர், வீராங்கனைகளை 39 விளையாட்டுகளில் பங்கேற்கின்றனர். இந்நிலையில், பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் தனிநபர் பிரிவில் ரமிதா வெண்கலம் வென்றுள்ளார்.

ரமிதா 230.1 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்து வெண்கலம் வென்றுள்ளார் சீனாவின் ஹான் ஜியாயு 251.3 புள்ளிகளுடன் வெள்ளி வென்றுள்ளார். இதற்கு முன்னதாக, மகளிர் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் ரமிதா, ஆஷி, மெகுலி கோஷ் ஆகியோர் அடங்கிய இந்திய மகளிர் அணி வெள்ளிப் பதக்கம் வென்றது.

அதன்படி, ரமிதா, மெஹுலி கோஷ் மற்றும் ஆஷி சௌக்சே ஆகிய மூவரும் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் மொத்தம் 1886 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கம் வென்றனர். சீனா 1896.6 புள்ளிகளுடன் தங்கம் வென்றது. மங்கோலியா 1880 உடன் வெண்கலப் பதக்கத்தை வென்றது. கடந்த முறை இந்தியா 16 தங்கம் உட்பட 70 பதக்கங்கள் வென்று பதக்க பட்டியலில் 8-வது இடத்தை பிடித்தது குறிப்பிடத்தக்கது.