ஆசிய விளையாட்டு 2023: டி20 போட்டி… நாளை காலிறுதியில் களமிறங்கும் ருத்ராஜ் தலைமையிலான இந்திய அணி!

சீனாவின் ஹாங்சோவ் நகரில் 19-வது ஆசிய விளையாட்டு போட்டி கடந்த 23ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  சீனா, ஜப்பான், இந்தியா, தென் கொரியா, பாகிஸ்தான் உள்பட 45 நாடுகளை சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் போட்டிகளில் பங்கேற்றுள்ளனர். அந்தவகையில், ஆசிய போட்டியில் பங்கேற்க இந்திய அணியில் இடம்பெற்றுள்ள 699 வீரர், வீராங்கனைகளை 39 விளையாட்டுகளில் பங்கேற்று விளையாடி வருகின்றன.

ஆசிய விளையாட்டு போட்டிகளில் 40 வகையான விளையாட்டுகள் 61 பிரிவுகளில் நடத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே, கிரிக்கெட், கால்பந்து, கைப்பந்து, படகுபந்தயம் உள்ளிட்ட சில போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனிடையே, சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டிகளில் இதுவரை இந்தியா 13 தங்கப் பதக்கங்கள் உள்பட மொத்தமாக 56 பதக்கங்களை பெற்று, பதக்க பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது.

இதில், இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி இறுதிப் போட்டியில் இலங்கையை அணியை வீழ்த்தி தங்கப் பதக்கம் பெற்றது ஒன்றாகும். இதன்பின், சீனாவில் ஆண்கள் 20 ஓவர் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. அதன்படி, ஆண்கள் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காள தேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 5 அணிகள் காலிறுதிக்கு நேரடியாக தகுதி பெற்றன.

மறுபக்கம், நேபாளம், மாலத்தீவு, மங்கோலியா, ஹாங்காங், ஜப்பான், கம்போடியா, மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து ஆகிய 9 அணிகள் லீக் சுற்றில் விளையாடின. லீக் ஆட்டங்கள் முடிவில் நேபாளம், ஹாங்காங், மலேசியா ஆகிய அணிகள் காலிறுதிக்கு தகுதி பெற்றன. இந்த காலிறுதி சுற்றில் வெற்றி பெரும் அணிகள் அரையிறுதி போட்டியை நோக்கி முன்னேறும், இதில் வெற்றி பெரும் அணிகள் இறுதிப் போட்டியில் விளையாடும்.

எனவே, இந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் ருதுராஜ் தலைமையிலான ஆண்கள் கிரிக்கெட் அணி நாளை காலிறுதி போட்டியில் நேரடியாக களமிறங்கவுள்ளது. ரோகித் சர்மா தலைமையிலான முதன்மை இந்திய அணி உலக கோப்பையில் விளையாடுவதால், ஆசிய விளையாட்டு தொடரில் பங்கேற்க ருதுராஜ் தலைமையில் 15 இளம் வீரர்களை கொண்ட அணி அறிவிக்கப்பட்டது.

இந்திய அணியில் வளரும் பல இளம் திறமையான வீரர்கள் இருக்கிறார்கள். இந்த அணிக்கு இந்திய முன்னாள் நட்சத்திர வீரர் லட்சுமணன் பயிற்சியாளராக இருக்கிறார். எனவே, நாளை தொடங்கும் காலிறுதி சுற்றில் இந்திய நேரப்படி காலை 6.30 மணிக்கு ஹங்கொழு நகரில் நேபால் அணியை இந்தியா எதிர்கொள்கிறது.

இந்திய அணி : ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), முகேஷ் குமார், ஆகாஷ் தீப், ஷிவம் துபே, பிரப்சிம்ரன் சிங் (விக்கெட் கீப்பர்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ராகுல் திரிபாதி, திலக் வர்மா, ரிங்கு சிங், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், ஷாபாஸ் அகமது, ரவி பிஷ்னோய், ஆவேஷ் கான் , அர்ஷ்தீப் சிங் ஆகியோர் உள்ளனர்.

Recent Posts

ஆளே இல்லாத வீட்டுக்கு அரசு செலவில் இலவச போலீஸ் பாதுகாப்பா? புது சர்ச்சையில் நடிகர் சூர்யா!

சென்னை: சென்னையில் உள்ள நடிகர் சூர்யாவின் வீட்டிற்கு கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக இலவசமாக போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. நடிகர் சூர்யா கடந்த ஆண்டு சென்னையில்…

9 mins ago

மிஸ் பண்ணிடாதீங்க..! கோடையில் கோலாகலமாக தொடங்கிய 61வது மலர் கண்காட்சி..!

சென்னை :  கொடைக்கானலில் 61-வது கோடை திருவிழாவானது மலர் கண்காட்சிகளுடன் கோலாகலமாக இன்று தொடங்கியுள்ளது. மலைகளின் இளவரசி என்று பெருமைக்குரிய இடம் தான் கொடைக்கானல், தமிழகத்தில் கோடை காலம்…

21 mins ago

ஜஸ்ட் மிஸ்! பாம் பிளாஸ்ட்லிருந்து தப்பித்த விஜய்..பயந்து நடுங்கிய சம்பவம்!

சென்னை : ஸ்டண்ட் காட்சி ஒன்றில் நடிகர் விஜய் பாம் பிளாஸ்ட்லிருந்து ஜஸ்ட் மிஸ்-ஸில் தப்பித்து இருக்கிறார். சினிமாவில் படங்களில் இருக்கும் ஸ்டண்ட் காட்சிகள் நாம் பார்ப்பதற்கு…

29 mins ago

TIDCO அட்டகாச அறிவிப்பு… குலசையில் புதிய விண்வெளி பூங்கா.!

சென்னை: குலசையில் விண்வெளி பூங்கா அமைக்கப்பட உள்ளதற்கான அறிவிப்பை டிட்கோ வெளியிட்டுள்ளது. இந்தியாவின் ராக்கெட் ஏவுதளமாக செயல்படும் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவை அடுத்து இரண்டாவதாக தூத்துக்குடி மாவட்டம்…

35 mins ago

என்னதான் குறைந்தாலும் சந்தோசமே இல்லை! குறைந்தது தங்கம்.. எவ்வளவு தெரியுமா?

சென்னை: கடந்த சில நாள்களாக ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே சென்ற நிலையில், இன்று குறைந்துள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக…

55 mins ago

அடுத்த 3 மணி நேரத்திற்கு 9 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 9 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் தகவலை தெரிவித்துள்ளது. கடந்த சில…

1 hour ago