இரண்டு முறை ஸ்டம்பை உடைத்து தெறிக்கவிட்ட அர்ஷ்தீப் சிங்…! ஐபிஎல் நிர்வாகத்துக்கு ஏற்பட்ட நஷ்டம்.!

ஐபிஎல் 2023 தொடரின் நேற்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டியில் மும்பையில் உள்ள வான்கடே  ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி அதிரடியாக விளையாடி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 214 ரன்கள் எடுத்தது.

அதனைத் தொடர்ந்து களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர் முடிவில் 201 ரன்கள் மட்டுமே எடுத்து 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.  இதன் மூலம் பஞ்சாப் அணி வெற்றிபெற்றது. இந்த வெற்றிக்கு முக்கிய காரணமே பஞ்சாப் அணியின் வேக பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங் தான். 

ஏனென்றால், மும்பை அணி பேட்டிங் செய்யும்போது கடைசி ஓவரில் 16 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலைமை இருந்தது. கடைசி ஓவரை அர்ஷ்தீப் சிங் தான் வீசினார். அவர் வீசிய 3-வது  பந்தை எதிர்கொண்ட திலக் வர்மா போல்டாகி வெளியேறினார். அர்ஷ்தீப் சிங் வீசிய அந்தப் பந்தில் மிடில் ஸ்டம்ப் இரண்டு துண்டாகியது.

அடுத்ததாக களமிறங்கிய நேகல் வதீரா அர்ஷ்தீப் சிங் வீசிய 4-வது பந்தில் போல்டாகினார். அந்த பந்தும் மிடில் ஸ்டம்பை இரண்டாக உடைத்தது. இரண்டு முறை ஸ்டம்புகளை உடைத்ததன் மூலம் ஐபிஎல் நிர்வாகதுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளார்.

இபிஎல்லில் பயன்படுத்தப்படும் ஒரு ஜோடி ஸ்டம்ப்பின் விலை $40,000, அதாவது இந்திய  மதிப்பில் 30 லட்சம். மற்ற ஸ்டம்புகளைவிட இந்த ஸ்டம்பில், எல்.இ,டிலைட், வாய்ஸ் ரெக்கார்டர், கேமரா உள்ளிட்டவைகள் இருப்பதால், இதன் விலை மிகவும் அதிகமானது.  இதை வைத்து பார்த்தால், ஐபிஎல் நிர்வாகத்துக்கு 20+ லட்சம் செலவு வந்திருக்கும் என கூறப்படுகிறது.  மேலும் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில்  அர்ஷ்தீப் சிங் 4 ஓவர்கள் பந்து வீசி 29 ரன்கள் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Leave a Comment