குஜராத் பிபர்ஜார் புயலில் புது உலகத்தை கண்ட 700 குழந்தைகள்.!  

குஜராத் பிபர்ஜார் புயல் சமயத்தில் சுமார் 700 குழந்தைகள் பிறந்துள்ளன. 

குஜராத் கடற்கரையோரம் உருவான பிபர்ஜார் புயல் காரணாமாக கடந்த 10 நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வந்தது. இந்த புயலானது, கடந்த வியாழக்கிழமை மாலை குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் உள்ள ஜகாவ் துறைமுகம் அருகே கரையை கடந்தது.

புயல் கரையை கடக்கும் நேரம் மழையின் அளவு , காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால், அரசாங்கம் முன்கூட்டியே 11 மாவட்டங்களில் இருந்து சுமார் 1 லட்சத்திற்கும் அதிகமானோர்களை வெளியேற்றினர். குறிப்பாக அந்த மாவட்டங்களில் இருந்து 1,152 கர்ப்பிணி பெண்கள் முன்கூட்டியே வெளியேற்றபட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு இருந்தனர். இந்த கர்ப்பிணிப் பெண்களில் 707 பேருக்கு புயல் சமயத்தில் குழந்தைகளை பெற்றெடுத்தனர்.

இதில், கட்ச் மாவட்டத்தில் சுமார் 348, ராஜ்கோட்டில் 100, தேவபூமி துவாரகாவில் 93, கிர் சோம்நாத்தில் 69, போர்பந்தரில் 30, ஜூனாகத்தில் 25, ஜாம்நகரில் 17, ராஜ்கோட் மஹாநகர்பாலிகாவில் 12, ஜுனாகத் முனிசிபல் கார்ப்பரேஷனில் 8 பிரசவங்கள் என தகவல்கள் பதிவாகியுள்ளன.