நடிகராக அறிமுகமானார் அர்ஜென்டினா நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி..!

அர்ஜென்டினா நட்சத்திர கால்பந்தாட்ட வீரர் லியோனல் மெஸ்ஸி நடிகராக அறிமுகமாகியுள்ளார்.

லத்தின் அமெரிக்காவில் ஜூன் 25ம் தேதி ஸ்டார் பிளஸ்-ல் ஒளிபரப்பப்பட்ட அர்ஜென்டினாவின் நகைச்சுவை நாடக நிகழ்ச்சியான ‘லாஸ் ப்ரொடெக்டர்ஸ்’ இரண்டாவது சீசனில் அர்ஜென்டினா நட்சத்திர கால்பந்தாட்ட வீரர் லியோனல் மெஸ்ஸி நடித்துள்ளார்.

இந்த தொடரில் பல ஐரோப்பிய கிளப்புகளில் போட்டியிடும் இளம் வீரர்களை ஆதரிப்பதற்கான ஒரு திட்டத்தைப் பற்றி விவாதிக்கும் ஒரு ஐந்து நிமிடக் காட்சியில், கால்பந்து வீரராக மெஸ்ஸி நடித்துள்ளார். மெஸ்ஸியின் நடிப்பு இந்நிகழ்ச்சியின் ரசிகர்கள் மற்றும் நடிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்த லாஸ் ப்ரொடெக்டர்ஸ் தொடரை ஸ்டார்+ பிளாட்ஃபார்மில் பார்க்கலாம் மேலும் இது 6.5 ஐஎம்டிபி ரேட்டிங்கைப் பெற்றுள்ளது. மேலும், லியோனல் மெஸ்ஸி பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் கிளப் உடனான ஒப்பந்தம் முடிவுக்கு வந்ததையடுத்து, அமெரிக்காவின் இன்டர் மியாமி கிளப்பில் இணைய உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.