பிரதமர் மோடி விழாவுக்கு நான் ஏன் வரவில்லை.? பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விளக்கம்.!

கர்நாடக தேர்தலை கவனிக்க பிரதமர் கூறியதால் நான் தமிழகத்தில் நடந்த வந்தே பாரத் ரயில் துவக்க விழாவில் நான் கலந்து கொள்ளவில்லை என அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார். 

திமுக கட்சியினர் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையிடம் அவர் கட்டியிருக்கும் ரபேல் வாட்ச் பில் பற்றி கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளிக்கும் விதமாக பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தான் ரபேல் பில்லை வெளியிடும் போது, திமுக குடும்பத்தார் மற்றும் திமுக கட்சியினரின் சொத்து பட்டியலையும் வெளியிடுவேன் என கூறியிருந்தார்.

ரபேல் வாட்ச் விளக்கம் :

அதன்படி இன்று காலை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சென்னையில், பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசி வருகிறார். அப்போது திமுக சொத்து பட்டியல் குறித்த விடியோவை மேடையில் வெளியிட்டார். மேலும் தனது ரபேல் வாட்ச் பில்லையும் வெளிப்படுத்தினார்.

பிரதமர் விழாவுக்கு வராதது ஏன்.? 

பின்னர் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் கூறினார். அப்போது, அண்மையில், பிரதமர் மோடி, வந்தே பாரத் ரயிலை தமிழத்தில் துவங்கி வைக்க சென்னை வந்த போது, அண்ணாமலை அந்த விழாவில் பங்கேற்காது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அண்ணாமலை பதில் கூறுகையில், பிரதமர் மோடி தன்னை விழாவுக்கு வர வேண்டாம் என கூறியதாகவும், கர்நாடாக தேர்தல் நெருங்குவதால், (மே மாதம் 10ஆம் தேதி கர்நாடக தேர்தல்) தேர்தல் பணிகளை கவனிக்க சொன்னதாகவும், அதனால், தமிழகத்தில் நடைபெற்ற பிரதமர் கலந்து கொண்ட விழாவில் பங்கேற்கவில்லை எனவும் விளக்கம் அளித்தார்.

அனைத்து கட்சி ஊழல் :

மேலும் பேசிய அண்ணாமலை, வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலுக்குள் அனைத்து கட்சிகளின் ஊழல் பட்டியலையும் வெளியிடுவேன் எனவும் , ஊழலுக்கு எதிராக போராட நினைக்கும் என்னை மாற்ற நினைத்தால், நேராக டெல்லிக்கு சென்று என்னை தலைவர் பொறுப்பில் இருந்து மாற்றுங்கள் எனவும் செய்தியாளர்கள் மத்தியில் அண்ணாமலை பேசினார்.

Leave a Comment