நடிக்க சம்மதம் தெரிவித்த அஞ்சலி, ஓவியா! ஹோட்டலுக்கு அழைத்த தயாரிப்பாளர்…மௌனம் கலைத்த இயக்குனர்!

சினிமாத்துறையில் அட்ஜெஸ்ட்மென்ட் குறித்து பிரபலங்கள் பலரும் வெளிப்படையாகவே பேசுவது உண்டு. சீரியல் நடிகைகள் இருந்து வெள்ளி திரையில் இருக்கும் பிரபலங்கள் பலரும் இதனை பற்றி பேசுவதை நாம் பார்த்திருப்போம். அந்த வகையில், பெண் உதவி இயக்குனர் கௌசல்யா என்பவர் தன்னை ஒரு தயாரிப்பாளர் படுக்கைக்கு அழைத்ததாக தெரிவித்து இருக்கிறார்.

கௌசல்யா இதுவரை பல இயக்குனர்களுடன் உதவி இயக்குனராக பணியாற்றி இருக்கிறாராம். இவர் ஒரு திரைப்படத்தை இயக்க ஆசைப்பட்டு அதற்கான கதையெல்லாம் தயார் செய்துவிட்டாராம். அந்த கதையை ஓசூருக்கு சென்று கௌசல்யா  தயாரிப்பாளர் ஒருவரிடம் கூறினாராம். அந்த தயாரிப்பாளரும் படத்தின் கதையை கேட்டுவிட்டு கதை நன்றாக இருக்கிறது இந்த படம் பண்ணலாம் என கூறினாராம்.

அந்த தயாரிப்பாளர் கௌசல்யாவுக்கு படத்தை இயக்க அட்வான்ஸ் ஆகா 5,000 கொடுத்தாராம். பிறகு படத்தில் யாரை நடிக்க வைக்கலாம் என்று கௌசல்யா  யோசித்துவிட்டு கதையை நடிகை ஓவியா மற்றும் அஞ்சலியிடம் கூறினாராம். அவர்களும் படத்தின் கதையை கேட்டவுடன் நடிக்கிறேன் என்று தெரிவித்துவிட்டாராம்.

பிறகு படத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் நடிகைகள் எல்லாம் ரெடியாக இருக்கிறார்கள் படப்பிடிப்பு எப்போது தொடங்கலாம் ஆபிஸ் வாருங்கள் நேரில் பேசலாம் என கௌசல்யா  அந்த தயாரிப்பாளரிடம் கேட்டாராம். அந்த அந்த தயாரிப்பாளர் மீண்டும் ஓசூர் வாருங்கள் மற்றோருவரை சந்தித்து பேசவேண்டி இருக்கு என்று கூறினாராம். அதற்கு கௌசல்யா  நான் என்னுடைய படக்குழு அனைவரையும் அழைத்து அங்கே வருகிறேன் என்று கூறினாராம்.

பிறகு அந்த தயாரிப்பாளர் இல்லை நீங்கள் மட்டும் வாருங்கள் என்று கூறினாராம். அதற்கு கௌசல்யா நான் மட்டும் எதற்காக வரணும்? என்று கேட்க அதற்கு அந்த தயாரிப்பாளர் நீ வா நம்ம ஹோட்டலில் ரூம் எடுத்து படத்தின் கதையை பற்றி ஒரு நாள் கலந்து பேசுவோம் என்று கூறினாராம். இதனால் கடுப்பான கௌசல்யா கதையை பற்றி பேச அழைக்கிறீர்களோ? இல்லை படுக்கைக்கு அழைக்கிறீர்களா? என வெளிப்படையாகவே கேட்டுவிட்டாராம்.

அதற்கு அந்த தயாரிப்பாளர் நீ என்ன இதுக்கு இப்படி பேசுகிறாய் வெளி இடத்தில் படப்பிடிப்பு நடந்தால் எப்படி நீ அங்கு வருவாய்? உன்னை நம்பி நான் எப்படி ஒரு படத்தை தயாரிக்கிறது? என்றும் இந்த படத்தை நாம் நிறுத்தி வைத்துக்கொள்ளலாம் என கூறிவிட்டாராம். பிறகு அந்த படமும் எடுக்கப்படாமல் அப்படியே நிறுத்திவைக்கப்பட்டுவிட்டதாகவும் பேட்டி ஒன்றில் கௌசல்யா தெரிவித்துள்ளார். மேலும் என்று இருந்தால் அந்த படத்தை செய்வேன் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.