பாலத்திற்கு அடியில் சிக்கிக்கொண்ட ஏர் இந்தியா விமானம்

பீகார் மாநிலம் மோதிஹாரியில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பிப்ரகோதி மேம்பாலத்தின் கீழ் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 29) காலை விமானம் சிக்கி கொண்டது. மும்பையில் இருந்து அசாமிற்கு, பழைய ஏர் இந்தியா விமானத்தை லாரியில் வைத்து கொண்டு சென்றபோது பாலத்திற்கு அடியில் விமானம் உடல்  சிக்கிக்கொண்டதால் அந்த இடத்தில் பரபரப்பு நிலவியது.

விமானத்தின் உடல் சிக்கியதால், தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.  பாலத்திற்கு அடியில் விமானம் சிக்கிக்கொண்டதால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது. பல வாகனங்கள் செல்லமுடியாமல் ஒரே இடத்தில் சில நிமிடங்கள் நிற்க வேண்டிய சூழல் நிலவியது.

அயோத்தியில் பிரதமர் மோடி.! ரூ.15,700 கோடிக்கு திட்டங்கள்.. புத்தம புது ஏர்போர்ட்.. ரயில் நிலையம்…

இந்த சம்பவத்தின் போது, ​​அந்த பகுதியில் நடந்து சென்ற மக்கள் அந்த இடத்தைச் சுற்றிலும் கூடி வீடியோ எடுக்கத் தொடங்கினர். செல்ஃபியும் எடுக்க ஆரம்பித்தார்கள்.  விமானத்தின் உடல் மேம்பாலத்தின் கீழ் சிக்கியதை அடுத்து உள்ளூர் நிர்வாகம் அங்கு வர வேண்டியிருந்தது.

தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விமானத்தை வெளியே எடுக்க தொடங்கினர். ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் லாரி மீட்கப்பட்டது. பல முயற்சிகளுக்குப் பிறகு, டயரில் இருந்து காற்று வெளியிடப்பட்டது, அதன் பிறகு லாரி பாலத்தை கடக்க முடிந்தது. பிறகு போக்குவரத்தில் நின்று கொண்டு இருந்த வாகனங்களும் வேகமாக செல்ல தொடங்கி போக்குவரத்து பாதிப்பும் நீங்கியது.