மல்யுத்த வீராங்கனைகள் போராட்டத்தில் வாக்குவாதம்.! ஆம் ஆத்மி எம்எல்ஏ உட்பட 3 பேர் கைது.!

டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் மல்யுத்த வீராங்கனைகளை பார்க்க சென்ற ஆம் ஆத்மி எம்எல்ஏ கைது செய்யப்பட்டார். மேலும், காங்கிரஸ் மாநிலங்களவை எம்பி தடுத்து நிறுத்தப்பட்டார். 

இந்திய மல்யுத்த வீராங்கனைகள் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும் பாஜக எம்.பியுமான பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது பாலியல் குற்றசாட்டுகளை முன் வைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

சரண் சிங் மீது அண்மையில் உச்சநீதிமன்ற உத்தரவை ஏற்று டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இருந்தும் சரண் சிங் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டத்தை வீராங்கனைகள் தொடர்ந்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று திடீரெனெ காவல்துறையினருக்கும், மல்யுத்த வீராங்கனைகளுக்கும் இடையே பிரச்சனை எழுந்தது. இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவி வந்தது.

போராட்ட இடத்தில மழை பெய்த காரணத்தால் போராட்டகாரர்கள் வைத்திருந்த பெட்ஷீட் நனைந்துவிட்டது. இதனால், அங்கு, வேறு பெட்ஷீட் எடுக்க செல்கையில் காவல்துறையினர் தடுத்ததாக போராட்டக்காரர்கள் தரப்பில் கூறப்படுகிறது. அப்போது, அங்கு வந்த ஆம்ஆத்மி எம்எல்ஏ சோம்நாத் பார்தி கைது மடிப்பு கொண்ட படுக்கையை கொண்டு வந்தார். அந்த சமயம் அவரும் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டார். இதனால் ஆம்ஆத்மி எம்எல்ஏ சோம்நாத் உட்பட மேலும் இருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

மேலும், காங்கிரசை சேர்ந்த ராஜ்யசபா எம்பி தீபேந்தர் ஹூடா மற்றும் டெல்லி மகளிர் ஆணைய தலைவி ஸ்வாதி மாலிவால் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபடும் வீராங்கனைகளை சந்திக்க சென்ற போது அவர்கள் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.