யாருடன் கூட்டணி.? தலைமை அலுவலகத்தில் தேமுதிக நிர்வாகிகள் முக்கிய ஆலோசனை..!

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழகத்தில் கட்சிகள் இடையே கூட்டணி நிலைப்பாடு குறித்த பேச்சு வார்த்தை தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.  தமிழகத்தின் முக்கிய கட்சிகளான திமுக மற்றும் அதிமுக கட்சிகள் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையை ஏற்கனவே தொடங்கிவிட்டன.

ரூ.3440 கோடி முதலீடுகள் முதல் பிரதமர் மோடி, நடிகர் விஜய் வரையில்…. முதல்வரின் கருத்துக்கள்..!

இந்நிலையில் தற்போது மறைந்த விஜயகாந்த் அவர்களின் கட்சியான தேமுதிக இந்த தேர்தலை எவ்வாறு கையாள போகிறது என கேள்விகள் இருந்த நிலையில் கூட்டணி குறித்த ஆலோசனையை தற்போது உள்ள தேமுதிக பொதுச்செயலாளரான பிரேமலதா அவர்களின் தலைமையில் இன்று கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் தொடங்கி உள்ளது.

இந்த தேமுதிக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டமானது  இன்று காலை 10 மணி அளவில் தொடங்கி உள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள தேமுதிக கட்சியின்  79 மாவட்ட செயலாளர்கள் அனைவருக்கும்  ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டுமென தேமுதிக தலைமையிலிருந்து அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா அவர்களின் தலைமயில் இந்த ஆலோசனை கூட்டத்தில், நடைபெற போகும் நாடாளுமன்ற கூட்டணி நிலைபாடு குறித்த ஆலோசனையை பற்றி பேசுவார்கள் என்பது எதிர்பார்க்க படுகிறது. குறிப்பாக கள்ளக்குறிச்சி, விருதுநகர் உட்பட தேமுதிகவுக்கு வாக்குகள் அதிகம் இருக்க கூடிய 7 தொகுதிகளை தேமுதிக தேர்வு செய்ய உள்ளதாகவும்.

குறைந்தது 4 மக்களவை தொகுதியையும், 1 ராஜ்ய சபா பதவியும் அளிக்கக்கூடிய கூட்டணியில் இடம் பெறுவதற்கு தேமுதிக திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் நாடாளுமன்ற கூட்டணி குறித்தான அதிகாரப்பூர்வ தகவல்கள் பேச்சு வார்த்தை நிறைவு பெற்ற பிறகே வெளியாகும் என தேமுதிக தரப்பில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது.

Leave a Comment