தமிழகத்தில் உள்ள எலிகள் எல்லாம் கஞ்சாவை தேடி காவல்நிலையம் வருகின்றன – தமிழிசை

பொது சிவில் சட்டம் அனைவருக்கும் சமமானது என ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் பேட்டி. 

தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் செய்தியாளர்களுக்கு  பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் உள்ள எலிகள் எல்லாம் கஞ்சாவை தேடி காவல்நிலையம் வருகின்றன. காவல்துறை, நீதிமன்றத்தில் குறைந்த அளவு கஞ்சாவை சமர்ப்பிக்கின்றது.

கஞ்சா வழக்கில் தொடர்புடைய இருவர் தப்பித்துவிட்டனர். காவல் நிலையத்தில் வைக்கப்படும் கஞ்சாவிற்கு யார் பாதுகாப்பு? எலிகளை எப்படி திருத்துவது? எலிகளின் போதையை எப்படி தடுப்பது? என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், பொது சிவில் சட்டம் அனைவருக்கும் சமமானது; ஒரு தரப்பினருக்கு எதிரான சட்டம் என்ற மாய தோற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். பொது சிவில் சட்டம் என்றால் பொதுவாகஇருக்கின்ற ஒரு சட்டம் என தெரிவித்துள்ளார்.