பட்டுக்கோட்டை ஆணவக்கொலை.. மேலும் 3 பேர் கைது..!

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே பூவாளுர் கிராமத்தைச் சேர்ந்த நவீன் என்ற இளைஞரும், நெய்வவிடுதி  கிராமத்தைச் சேர்ந்த ஐஸ்வர்யா என்ற  இளம் பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இவர்கள் திருப்பூர் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளனர். இருவரும் வேறுவேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களின் காதலுக்கு ஐஸ்வர்யா பெற்றோர்கள் தரப்பில் எதிர்ப்பு எழுந்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், கடந்த மாதம் 31-ம் தேதி தேதி பல்லடம் அருகே ஒரு கோயிலில் திருமணம் செய்து கொண்டனர். அங்கேயே வீடு எடுத்து தாங்கி வந்துள்ளனர். அத்திருமண வீடியோ ஐஸ்வர்யா மற்றும் நவீன்  ஊர்களில் வாட்ஸ் ஆப்பில் பரவியது.  வந்துள்ளது. பின்னர், ஐஸ்வர்யாவின் பெற்றோருக்குத் தெரியவந்த நிலையில், இது தொடர்பாக ஐஸ்வர்யாவின் பெற்றோர் பல்லடம் காவல் நிலையத்தில் மகளை காணவில்லை என புகார் அளித்தனர்.

அதிமுக பொதுக்கூட்டத்திற்கு அனுமதி வழங்க உத்தரவு..!

பல்லடம் காவல்துறை கடந்த 2-ம் தேதி ஐஸ்வர்யாவை சமாதானப்படுத்தி அவரது பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.  அடுத்த நாளே அதாவது (கடந்த 3 -ம் தேதி) நவீன் நண்பர்கள் அவரை  தொடர்பு கொண்டு ஐஸ்வர்யாவை அவரது பெற்றோர்கள் துன்புறுத்தி கொலை செய்து எரித்துவிட்டனர் என தெரிவித்தனர். ஐஸ்வர்யா உடல் எரிக்கப்பட்ட சுடுகாட்டிற்கு காவல்துறையினர் சென்று பார்த்தபோது அங்கு சாம்பல் கூட இல்லாததை கண்ட அதிர்ச்சி அடைந்தனர்.

ஐஸ்வர்யாவின் சாம்பல் கூட நவீனுக்கு கிடைக்க கூடாது என அதை சுடுகாட்டில் இருந்து அவரது பெற்றோர்கள் அப்புறப்படுத்தி உள்ளனர். இந்நிலையில், இளம்பெண் கொலை வழக்கில் பெற்றோர்கள் உள்ளிட்ட 5 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர். அதன்படி ஐஸ்வர்யா உறவினர்களான ரெங்கசாமி, பிரபு, சுப்பிரமணியன் ஆகியோரை கைது செய்து போலீசார் 3 பேரையும் பட்டுக்கோட்டை நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர் செய்ய உள்ளனர்.

நாளை மறுநாள் விலகுகிறது வடகிழக்கு பருவமழை.!

இளம்பெண் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 5 பேரும் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அவர்களை வரும் 24-ம் தேதி வரை சிறையிலடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.