ரூ.1,499 ரீசார்ஜ் திட்டம்! எது பெஸ்ட்? ஏர்டெல்-ஆ ஜியோ -வா?

ஜோவும் ஏர்டெல்லுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி கொண்டு வருகிறதாக கூறப்படுகிறது. ஏனென்றால், இவை இரண்டம் பயனர்களை கவர வேண்டும் என்ற காரணத்துக்காகவே பல சலுகைகள் கொண்ட ஆஃபர்களை கொண்டு வருகிறார்கள். அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜியோ வருடாந்திர ரீசார்ஜ் திட்டத்தில் மாறுபாட்டை கொண்டு வந்தது.

தினமும் 2.5 ஜிபி டேட்டா! புத்தாண்டை முன்னிட்டு ஜியோ வாடிக்கையாளர்களுக்கு அசத்தல் சலுகை!

அதனை தொடர்ந்து ஏர்டெல் மற்றும் ஜியோ இரண்டிலும் ரூ.1499 திட்டத்தில் நெட்ப்ளிக்ஸ் தளம் பயன்படுத்திக்கொள்ளும் வசதியுடன் வந்துள்ள ரீசார்ச் திட்டத்தை பற்றியும், இதில் ஏர்டெல் மற்றும் ஜியோ  இரண்டில் எது சிறந்தவை என்பதனையும் இதில் பார்க்கலாம்.

ஏர்டெல் ரூ.1,499 திட்டம் 

  • ஏர்டெல் ரூ.1,499 திட்டத்தை பொறுத்தவரையில், 84 நாட்கள் வேலிடிட்டி உடன் தினமும் 3ஜிபி டேட்டா வசதி வருகிறது. அன்லிமிடெட் கால் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ், இலவச நெட்பிளிக்ஸ் (போன்) , அப்பல்லோ 24/7 சர்கிள், விங்க் மியூசிக் ஆகியதுடைய சப்ஸ்கிரிப்ஷன் வருகிறது.

ஜியோ ரூ.1,499 திட்டம் 

  • ஜியோ ரூ.1,499 திட்டத்தை பொறுத்தவரையில், 84 நாட்கள் வேலிடிட்டி உடன் தினமும் 3ஜிபி டேட்டா வசதி வருகிறது. அன்லிமிடெட் கால் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ், இலவச நெட்பிளிக்ஸ் (போன்) மற்றும் ஜியோசினிமா, ஜியோ கிளவுட் , ஜியோ டிவி ஆகியவற்றுடன் வருகிறது.

ஜியோ vs ஏர்டெல் எது பெஸ்ட்?

ரூ.1,499 ரீசார்ச் திட்டத்தில் ஜியோ மற்றும் ஏர்டெல் இரண்டுமே ஒரே விலையில் தான் வருகிறது. அதைப்போல, 3ஜிபி டேட்டா வசதி 84 நாட்கள் வேலிடிட்டி  இரண்டு சிம்களிலும் கிடைக்கிறது. ஆனால், சப்ஸ்கிரிப்ஷன் பொறுத்தவரையில் இரண்டிலும் நெட்பிளிக்ஸ் வந்தாலும் ஏர்டெல் -ஐ விட ஜியோவில் ஜியோசினிமா, ஜியோ கிளவுட் , ஜியோ டிவி  ஆகியவை வருகிறது.

எனவே, ஜியோசினிமா, ஜியோ கிளவுட் , ஜியோ டிவி ஆகியவற்றை வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த திட்டத்தில் ரீசார்ச் செய்து கொள்ளலாம். மேலும், இந்த இரண்டு சிம்களிலும் ரீசார்ஜ் செய்பவர்களுக்கு 5 ஜி அன்லிமிடெட்  டேட்டா சலுகையும் இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.